இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏன் ஒரு பெண் கூட சீதை இல்லை| பாம்பன் மு. பிரசாந்த் |Arunakayiru

படம்
விவேகானந்தரின் பேச்சு குறித்து பேச்சு.

சங்கு கல் மண்டபம் எதற்கு?. அர்த்தமுள்ள இந்து மதம் நூலிலிருந்து

!!  அர்த்தமுள்ள இந்து மதம் !! *ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..?* ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..! நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம். இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..? தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது. அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்.... இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள்  மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர். வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் ச

அடப்பாவிகளா... டே சீரோ(day zero) வந்துடுச்சா??😳😳😳

டே சீரோ(Day zero)என்றால்? கடைசி சொட்டு குடிநீரை ஏப்ரல் 12ம் தேதி பருகவுள்ள கேப்டவுன் நகரம்! தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் விரைவில் ‘டே சீரோ’ என்ற நிலையை எட்டவிருக்கிறது. ‘டே சீரோ’ என்றால் என்னவென்று யோசிக்கின்றீர்களா? உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. இதைத் தான் ஆங்கிலத்தில் “டே சீரோ” (Day Zero) என்று சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, கேப்டவுன் நகரம் இந்த நாளை எட்டுகிறது. சமூக தளங்களில் அவ்வப்போது பரவும் சில தகவல்களை போன்றதொரு நிலை உண்மையில் உருவாகப் போகிறது நம் கண் முன்னே. அதுவும், சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் போகும் நாளை துல்லியமாக அறிவிக்கப்பட்டு, அதை பதைபதைப்புடன் எதிர்நோக்கியுள்ளனர் கேப்டவுன் மக்கள். குறிப்பாக, சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி, தென்னப்பிரிககவுக்கு எதிராக இந்த கேப்டவுன் நகரில் உள்ள மைதானத்தில் விளையாடிய போது, இந்திய வீரர்கள் 2 நிமிடத்திற்கு மேல் குளிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஏன் இந்த நிலை? கேப்டவுன் நகரில் 4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

பஞ்சபூமி கவிதை | கவிஞர் சிபிபாரதி |coffee with kavithai #04|Arunakayiru

படம்

47 வகை நீர்நிலைகள் - ancient tamil culture 47 different water bodies

வெறுமனே எழுத்தென்றில்லாமல் இந்த தகவலை இங்கு பகிர காரணம், இது போன்ற தகவல்கள் நம் பழமையையும் காரணப் பெயரிடும் திறனையும் எதிர்வரும் சந்ததிக்கு கடத்த வழியாக என்பதுதான்.. இதோ.. பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி. 05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். 06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை. 08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது. 09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம். 10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர். 11 *கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தி