இடுகைகள்

தமிழ் கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரட்டும் மழை

முகத்தில் துப்பட்டா கட்டாத முச்சந்தி முல்லைக்கு முகம்கழுவ, பொத்துக்கொண்டு கொட்டி புளியங்காய்களுக்கு போட்டிபோட்டுப் பொட்டு வைக்க, வேண்டுமென்றே அவனுக்கு அவள் ...

பிறப்புரிமை

பிறப்புரிமை பிறப்புரிமை என்றொன்று கிடையவே கிடையாது இருப்புரிமை ஒன்றுதான் இருப்பதெல்லாம்.. அப்பனுக்குள்ளே அடங்கியிருந்தேன் ஆண்டாண்டு காலங்களாய்.. உள்ளே "இருக்...

இயற்கை ( காடு - மாத இதழுக்காக )

    ............     இயற்கை  - காடு   ............. எழிலென்றும் பொழிலென்றும் எல்லோரும் பாராட்டும் அழகொன்றே இயற்கையெனில் அதுவும் தவறு. முகில்தூவி முல்லைக்கு முகம்கழுவும் அழகியலை முழு...

காதலியின் வேதனை - கவிஞர் பெனடிக்ட்

படம்
kavignar Benadict Poems Watch the Video                                                        காதலியின் வேதனை

காதலாகி.....கண்ணீர் மல்கி....

மந்திரச் சிரிப்பில்      மாயங்கள் செய்திடும் சுந்தரப் பெண்சிலையே. நீ பம்பரம் போலென்னை    சுற்றிட வைத்திடும் மந்திரம் எங்குகற்றாய் எனக்கென எதுவும்     இல்லையென்...

விருப்பம்

படம்
வேண்டாப் பொருளே என்றாலும்      இல்லை யென்றால் விருப்பம் ஆசை தீபம் அனையா தெரியத்      தூண்டுந் திரியே விருப்பம். ஆடவனின் வன்மைமேல்     அணங்குக்கு விருப்பம். அணங்கவளின் மென்மைமேல்     ஆண்மைக்கும் விருப்பம். நாற்காலி அடையமட்டும்     எல்லோர்க்கும் விருப்பம் நல்லாட்சி புரிவதற்கு     யாருக்கு விருப்பம்....... ஆசை வந்து தொலைத்து விட்டால்      அடையும் வரையில் விருப்பம் அவரிடமில்லா அனைத்தின்மீதும்      அவக் காச்சியாய் விருப்பம். ஐம்பது ரூபாயில் கண்ணதாசனின்  அழியாக்காவியம்     ஒட்டுமொத்த உலகம் இயங்க      ஒற்றை சூத்திரம் விருப்பம். உலகம் என்னும் நாடக மேடையில்      உயர்ந்த பாத்திரம் விருப்பம்.                                 -பாம்பன் மு.பி...

ஆணா ?பெண்ணா ?

படம்
கட்டிலிலே ஆடவன்தான் ஆதிக்கமா?-இந்த ஆதிக்கத்தால் சமஉரிமை பாதிக்குமா? இயற்கை நம்மை இப்படியும் சோதிக்குமா?-இதை பின்தொடர்ந்தால் இந்த உலகம் சாதிக்குமா? சரிபாதி பெண்ணென்ற         நிலை வேண்டுமே-அதை சரித்துப் பேசிடாத         தலை வேண்டுமே சரிபாதி தரமறுத்து        சண்டையிடும் மனிதா? அவள் சரிபாதி இல்லையெனில்       உயிர்வாழ்வது எளிதா? உறுப்பில் பிரிவினையா?       உணர்வில் பிரிவினையா? அடுப்பென்ன விறகென்ன       இணைந்தால்தான் வாழ்வு அதுகூட புரியாவிடில் ....... இப்படியே சாவு....  -பாம்பன்.மு.பிரசாந்த் அழியாத எண்ணங்களால் மனதில் நிலையாக வாழுகின்ற கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்  மிகக்குறைந்த விலையில்  35 ரூபாய் மட்டுமே...                                                       ...

விடிந்ததா?விடியலயா?

படம்
             வித்யாசமான தலைப்புகளை பார்க்கும்பொழுது வருகிற சிரிப்பை விட அலாதியான சுவாரஸ்யம் அப்படி ஒரு தலைப்பை  நேரடியாக நாமே சந்திப்பதில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக  "போங்கடி நீங்களும் ", "மொசரக்கட்டை","விரலா? வீக்கமா?" போன்ற தலைப்புகள் அந்த அனுபவத்தை ஏற்கனவே தந்தவை. அதே போன்ற தலைப்புதான் இதுவும் கூட.எதோ தூக்க கலக்கத்தில் 3 மணிக்கு எழுந்து கேட்கிற கேள்வியை தலைப்பாகவே தந்து விளையாடிய ஆவடி எழில் இலக்கிய பேரவைக்கு நன்றி. 13.08.17 அன்று ஆவை எழில் இலக்கிய பேரவை நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை. தலைப்பு:விடிந்ததா?விடியலயா? கேள்விகளை ஆகூதியாக்கி        விடைகளை பிராப்தம் பெற வேள்வி நடத்தும் பேரவையே ! வெடிவைத்து தகர்த்தாலும்     வெட்டுறாத பாறை-சிறு தட்டுளிக்கு  கட்டுப்  படும்             (அன்றேல்) பசுமரத்து வேரோடி      பலமான பாறைகூட பாதியாக வெட்டுப் படும். மரத்துக்கும் தோல்வி மலைக்கும் தோல்வி விடியல் யாருக்கு...... .? தானாக உடைந்ததை த...

என்னை அறிந்தால்

படம்
என்னை அறிந்தால் ஒரு தடையும்  வழியில் இல்லை-இலக்காக விண்ணை அறிந்தால் காதல்முறிவு  காணாமல்போகும்-சரியாக பெண்ணை அறிந்தால் ஓடி ஓடி ஊர்முழுக்க சொத்து பத்து சேர்க்கமாட்டான் கடைசியான 6 அடி மண்ணை அறிந்தால் அறிதோறும் அறியாமை அறிந்தவர் யாரோ அறிவாளி அவரென்று அகிலம் சொல்லும்-இதை அறியாதார் மடையரென்றும் அதுவே சொல்லும். ஆடும் வரை ஆடிவிட்டு காடு தேடி ஓடும் கூடு என்ற உண்மை மட்டும் உணர்ந்திருந்தால் போதும். என்றும் அன்புடன் உங்கள் பாம்பன் மு பிரசாந்த் 

வானமே எல்லை

பெரம்பூர் கவியரங்கம்... இலக்கியவானம் அமைப்பு நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற நம் கவிதை.. தலைப்பு..வானமே எல்லை ஓங்குயர் புகழ்ப்படைத்த தமிழேடுத்து நல்ல பாங்குடை கவ...

சொந்தமாய் ஒரு சொர்க்கம்

படம்
சொந்தமாய் ஒரு சொர்க்கம் தமிழ் வணக்கம்: அந்தரத்தின் அந்தரமே சுந்தரத் தேன்தமிழே வந்தெனக்கு நற்றமிழை தந்திடடி நாவினிலே ... தமிழே !!!! வினைசெய்த பயனால் இங்கு                        பிறந்திருக்கிறேன் இணையில்லா உனைத் தாயாய்                        அடைந்திருக்கிறேன் துணைசெய்து உனைஉயர்த்த                        துணிந்திருக்கிறேன் -இந்த துர்பிறப்பு அதற்குத்தானே                        பிறந்திருக்கிறேன் .. சுகமென்ற ஆனந்தம்    சொர்க்கத்தில் உள்ளதென்றால் அகமகிழும் ஆனந்தம்    அது என்ன வீணா?? தக தக வென கதிர்கொதித்து      புவிவெப்பம் பொங்கும்போதும் குளுகுளுவென வாழும்நிலை      சொந்த சொர்க்கமே.. தனிவீடு தானின்றி   தார்ச்சாலை வீடாக தன்குடும்பத் தோடுவாழும்    புன்மனது வறியவன...

கவிதாஞ்சலி (கவிக்கோ)

படம்
மறைந்த ஐயா கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்காக கவிதை சிறகுகள் அமைப்பு நடத்திய கவிதாஞ்சலி கவிதை... மதம் கடந்து மனித பண்புகளோடு மல்லாந்த முகத்தோடு அனைவரையும் எதிர்கொள்ளும் பண்பாளர்.சிறந்த இலக்கிய வாதி ..ஆகச்சிறந்த கவிஞர்,பேச்சாளர்,எழுத்தாளர்,சிந்தனையாளர்,.. மொத்தத்தில் தமிழக இலக்கிய உலகில் முத்திரை பதித்து இருக்கக்கூடிய இலக்கிய ஆளுமை...என்போன்ற ரசிகர்களுக்கும் சரி, நல்ல ரசிகர்களுக்கும் சரி, இவர் படைப்புகள் தீனி போட்டு திருப்திப்படுத்தும் என்பதில் ஐயமில்லை ....      #  கவிதாஞ்சலி  பால்வீதி பார்க்க சென்ற      படைப்பாளி ஒருவருக்கு, கடவுளை காணச்சென்ற-என்        கவிதை கடவுளுக்கு  காதலாகி கசிந்துருகி       கண்ணீர் மல்க கவிதாஞ்சலி  தவிக்கும் மனதுக்கு     தாய்தமிழல் மருந்திட்டு  செவிக்கோர் விருந்தாக     தீந்தமிழை தந்தளிக்கும்   புவிக்கோர் நாயகன் என்      கவிக்கோவின்  காலடியில்  கண்ணீரை சேர்த்தவாறு...

மது செய்யும் மாயம்

படம்
  தமிழ்நாடு திருவள்ளுவர் காலை இலக்கிய மன்றம் நடத்திய கவியரங்கில் இடபெற்ற மது   செய்யும் மாயம் என்ற தலைப்பிலான கவிதை ..                   மது செய்யும் மாயம் தமிழ் வணக்கம் : தமிழே ..!! நீ இல்லாமல் எப்படி நான்                  தனித்திருப்பேன் நீ இல்லாது போனால் நான்                   தவித்திருப்பேன் தேடியெனும் உனைக்கற்று                   களித்திருப்பேன் - அந்த தேவாமிர் தம்போலே                   இனித்திருப்பேன் ... உச்சப்புகழ்   பெற்றுலகம்         மெச்சத்தகு அ...