இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வானத்தில் மீனா? மீன் மழை மர்மம்

படம்
கொடுக்குற தெய்வம் கூரையப்பிச்சிக்கிட்டா கொடுக்கும்” என்கிற பழஞ்சொலவடைகள் கேள்விப்பட்டதுண்டா?.  ஒருவீட்டுக்கு கொடுக்க வேண்டுமென்றால் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கலாம். ஒரு ஊருக்கே கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு வானம்தான் கூரை.  ஆம் வானம் கிழிந்து வந்துவிழுந்தால் பொருட்கள் என்னென்னவாக இருக்கும். கொஞ்சம் நல்ல மெத்மெத்தென்ற பஞ்சுமேகம், ஜில்லென்ற தண்ணீர், முப்பத்து முக்கோடி கிரண,கிம்புருட, தேவ,அசுரர்கள். கண்ணுக்குமுன்னே ரோட்டில் கைலாய எஃபெக்ட் என இத்யாதி இத்யாதிகளாக இன்னும் என்னென்னவெல்லாமோ வரலாம். ஆனால் இங்கே மீன் வந்திருக்கிறது. அப்படியா மீன் கூட வருமா? என்ன இது புதுக்கதை என்கிறீர்களா. புதுக்கதை எல்லாம் இல்லை. இது ரொம்பப் பழைய கதை. இப்போது ஆந்திராவில் பெய்திருக்கும் மீன் மழையால் புதுப்பிக்கப்பட்ட கதை.  அப்படியென்றால் இது எப்படிச்சாத்தியம். பறவைகள் விழுந்தால் கூட எதோ வானத்தில் பறந்த்போது மேகத்தில் மாட்டிக்கொண்டு இப்போது விழுந்திருக்கிறது என்று கதை கட்டிக்கொள்ளலாம். ஆனால் பறக்கவும் முடியாத இவைகள் எப்படி வானத்தில் இருந்து விழுகின்றன. இவை மட்டுமல்ல என்னென்னவோ விழுந்திருக்கின்றன.