மறைந்த ஐயா கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்காக கவிதை சிறகுகள் அமைப்பு நடத்திய கவிதாஞ்சலி கவிதை... மதம் கடந்து மனித பண்புகளோடு மல்லாந்த முகத்தோடு அனைவரையும் எதிர்கொள்ளும் பண்பாளர்.சிறந்த இலக்கிய வாதி ..ஆகச்சிறந்த கவிஞர்,பேச்சாளர்,எழுத்தாளர்,சிந்தனையாளர்,.. மொத்தத்தில் தமிழக இலக்கிய உலகில் முத்திரை பதித்து இருக்கக்கூடிய இலக்கிய ஆளுமை...என்போன்ற ரசிகர்களுக்கும் சரி, நல்ல ரசிகர்களுக்கும் சரி, இவர் படைப்புகள் தீனி போட்டு திருப்திப்படுத்தும் என்பதில் ஐயமில்லை .... # கவிதாஞ்சலி பால்வீதி பார்க்க சென்ற படைப்பாளி ஒருவருக்கு, கடவுளை காணச்சென்ற-என் கவிதை கடவுளுக்கு காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்க கவிதாஞ்சலி தவிக்கும் மனதுக்கு தாய்தமிழல் மருந்திட்டு செவிக்கோர் விருந்தாக தீந்தமிழை தந்தளிக்கும் புவிக்கோர் நாயகன் என் கவிக்கோவின் காலடியில் கண்ணீரை சேர்த்தவாறு...