இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைஞருக்கு கலைஞனின் வாழ்த்து..

படம்
திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர்  திரு.மு. கருணாநிதி அவர்களின் 83வது பிறந்த நாளில் , தன் தலைவரின் பிறந்த நாளை தன் கவிதை வரிகளால் வாழ்த்தி வணங்கி அழகு பார்த்திருக்கிறான். எனது தாய்மாமன் என்ற உறவையும் தாண்டி என் குடும்பத்து கவிஞர்களில் முதன்மையானவர் என்கிற வகையில் அவர் என் தனிப்பட்ட வணக்கத்துக்குரியவர். 1997 ம் ஆண்டு கலைஞரின் பிறந்த நாள் விழாவுக்காக பாம்பன் சங்கர் ( சங்கர் குமார் க) எழுதிய கவிதை.... நீண்ட  காலத்துக்கு பிறகு இன்றுதான் கிடைத்தது... இதோ...... முத்தமிழ் அறிஞரே.. முத்துவேலர் மைந்தரே... தமிழ்தாயின் தலைமகனே.. தமிழினத்தின் தலைவனே.. உண்மைக்கு எதிரான சக்திகளை உடைதெறிந்த உத்தமனே... ஆதிக்க நெறியோர்க்கும் அதிகார வெறியோர்க்கும் அச்சுறுத்தல் நீரே... ஏழைகளின் இதய துடிப்பு அறிந்தவர் நீரே.. இதயத்து இன்னல்கள் களைந்தவர் நீரே.. சங்கத்தமிழ் சங்கமிக்கும் உன் நாவினிலே.. சத்தியம் தவறாமை காணுகையில் தமிழன்னையே.. தவமிருந்து பெற்ற தலைமகன் நீர் என்று தெளிவாயிற்று... கருணையும் நீதியும் பெயரிலே இணையப்பெற்றது உன் பிறப்பின் சிறப்பாயிற்று... அரியணை அமர்ந்து நீ ஆற்றிய பணி.. அணுபவத்தின

பள்ளி குழந்தை:vs தொழில் குழந்தை:

பள்ளி குழந்தை:   பாட மூட்டை தேவையில்லை பாஸ் பெயிலென கவலையில்லை   தேர்வுகள் ஏதுமில்லை - இவர்க்கு தேவையில்லாத குழப்பமில்லை   வேலைக்கேற்ப  வெகுமானம்   விரும்பும்போது விளையாட்டு   பிரம்பு கண்டு பயமுமில்லை   பிஸ்கட் பாக்சும்  தேவையில்லை தொழில் குழந்தை :   பத்திரமாய் பள்ளி சென்று   பலரோடு சிறிது பேசி   அன்னை கை சமையலிலே   அன்றாடம் சாப்பிடுகிற   அமோக  வாழ்க்கை   முதலாளி முகம் பார்க்க முன்னூறு முறை எண்ணி முன்னும் பின்னும் பயந்து நெளியும் முழு கஷ்டம் ஏதுமில்லை 1 ரூபாய் அதிகம் கேட்டு  ஓனரிடம் அடிவாங்கி அதன் பின்னர் பணம் வாங்கி  அந்த ஓரூ ரூபாய்க்கும் அப்படியே மருந்து வாங்கி  ஒத்தடம் கொடுக்கிற ஓயாத் துயரில்லை. சிரிப்பின் சாயலை  சிரிப்போரை பார்த்து மட்டும்    இப்படித்தான் சிரிப்பதேன   எண்ணிப்பார்த்து கொள்ளுகிற சிரிப்பாய் சிரிக்கும் பிழைப்பு இது.   பள்ளி குழந்தை: விடைத்தாள் வந்ததும்   வீட்டுக்கு பயந்து விஷக்காய்ச்சல் வேடமிட்டு   கலக்கலாய் நடித்து கையெழுத்து வாங்க வேண்டிய   கட்டாயம் ஏதுமில்லை மூளையில்  பத