இடுகைகள்

water scarcity லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடப்பாவிகளா... டே சீரோ(day zero) வந்துடுச்சா??😳😳😳

டே சீரோ(Day zero)என்றால்? கடைசி சொட்டு குடிநீரை ஏப்ரல் 12ம் தேதி பருகவுள்ள கேப்டவுன் நகரம்! தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் விரைவில் ‘டே சீரோ’ என்ற நிலையை எட்டவிருக்கிறது. ‘டே சீரோ’ என்றால் என்னவென்று யோசிக்கின்றீர்களா? உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. இதைத் தான் ஆங்கிலத்தில் “டே சீரோ” (Day Zero) என்று சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, கேப்டவுன் நகரம் இந்த நாளை எட்டுகிறது. சமூக தளங்களில் அவ்வப்போது பரவும் சில தகவல்களை போன்றதொரு நிலை உண்மையில் உருவாகப் போகிறது நம் கண் முன்னே. அதுவும், சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் போகும் நாளை துல்லியமாக அறிவிக்கப்பட்டு, அதை பதைபதைப்புடன் எதிர்நோக்கியுள்ளனர் கேப்டவுன் மக்கள். குறிப்பாக, சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி, தென்னப்பிரிககவுக்கு எதிராக இந்த கேப்டவுன் நகரில் உள்ள மைதானத்தில் விளையாடிய போது, இந்திய வீரர்கள் 2 நிமிடத்திற்கு மேல் குளிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஏன் இந்த நிலை? கேப்டவுன் நகரில் 4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.