இடுகைகள்

தமிழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாய்மொழியும் கையெழுத்தும்

மொழி வெறும் மொழியாக மட்டும் பார்க்கப்படும் தேசத்தில், இருப்பதைக்காட்டிலும் அழிந்து போவது அந்த மொழிக்கு நல்லது என்றே தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு கவிதை நாவலில் க...

ஆணா ?பெண்ணா ?

படம்
கட்டிலிலே ஆடவன்தான் ஆதிக்கமா?-இந்த ஆதிக்கத்தால் சமஉரிமை பாதிக்குமா? இயற்கை நம்மை இப்படியும் சோதிக்குமா?-இதை பின்தொடர்ந்தால் இந்த உலகம் சாதிக்குமா? சரிபாதி பெண்ணென்ற         நிலை வேண்டுமே-அதை சரித்துப் பேசிடாத         தலை வேண்டுமே சரிபாதி தரமறுத்து        சண்டையிடும் மனிதா? அவள் சரிபாதி இல்லையெனில்       உயிர்வாழ்வது எளிதா? உறுப்பில் பிரிவினையா?       உணர்வில் பிரிவினையா? அடுப்பென்ன விறகென்ன       இணைந்தால்தான் வாழ்வு அதுகூட புரியாவிடில் ....... இப்படியே சாவு....  -பாம்பன்.மு.பிரசாந்த் அழியாத எண்ணங்களால் மனதில் நிலையாக வாழுகின்ற கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்  மிகக்குறைந்த விலையில்  35 ரூபாய் மட்டுமே...                                                       ...

விடிந்ததா?விடியலயா?

படம்
             வித்யாசமான தலைப்புகளை பார்க்கும்பொழுது வருகிற சிரிப்பை விட அலாதியான சுவாரஸ்யம் அப்படி ஒரு தலைப்பை  நேரடியாக நாமே சந்திப்பதில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக  "போங்கடி நீங்களும் ", "மொசரக்கட்டை","விரலா? வீக்கமா?" போன்ற தலைப்புகள் அந்த அனுபவத்தை ஏற்கனவே தந்தவை. அதே போன்ற தலைப்புதான் இதுவும் கூட.எதோ தூக்க கலக்கத்தில் 3 மணிக்கு எழுந்து கேட்கிற கேள்வியை தலைப்பாகவே தந்து விளையாடிய ஆவடி எழில் இலக்கிய பேரவைக்கு நன்றி. 13.08.17 அன்று ஆவை எழில் இலக்கிய பேரவை நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை. தலைப்பு:விடிந்ததா?விடியலயா? கேள்விகளை ஆகூதியாக்கி        விடைகளை பிராப்தம் பெற வேள்வி நடத்தும் பேரவையே ! வெடிவைத்து தகர்த்தாலும்     வெட்டுறாத பாறை-சிறு தட்டுளிக்கு  கட்டுப்  படும்             (அன்றேல்) பசுமரத்து வேரோடி      பலமான பாறைகூட பாதியாக வெட்டுப் படும். மரத்துக்கும் தோல்வி மலைக்கும் தோல்வி விடியல் யாருக்கு...... .? தானாக உடைந்ததை த...

என்னை அறிந்தால்

படம்
என்னை அறிந்தால் ஒரு தடையும்  வழியில் இல்லை-இலக்காக விண்ணை அறிந்தால் காதல்முறிவு  காணாமல்போகும்-சரியாக பெண்ணை அறிந்தால் ஓடி ஓடி ஊர்முழுக்க சொத்து பத்து சேர்க்கமாட்டான் கடைசியான 6 அடி மண்ணை அறிந்தால் அறிதோறும் அறியாமை அறிந்தவர் யாரோ அறிவாளி அவரென்று அகிலம் சொல்லும்-இதை அறியாதார் மடையரென்றும் அதுவே சொல்லும். ஆடும் வரை ஆடிவிட்டு காடு தேடி ஓடும் கூடு என்ற உண்மை மட்டும் உணர்ந்திருந்தால் போதும். என்றும் அன்புடன் உங்கள் பாம்பன் மு பிரசாந்த் 

கலைஞருக்கு கலைஞனின் வாழ்த்து..

படம்
திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர்  திரு.மு. கருணாநிதி அவர்களின் 83வது பிறந்த நாளில் , தன் தலைவரின் பிறந்த நாளை தன் கவிதை வரிகளால் வாழ்த்தி வணங்கி அழகு பார்த்திருக்கிறான். எனது தாய்மாமன் என்ற உறவையும் தாண்டி என் குடும்பத்து கவிஞர்களில் முதன்மையானவர் என்கிற வகையில் அவர் என் தனிப்பட்ட வணக்கத்துக்குரியவர். 1997 ம் ஆண்டு கலைஞரின் பிறந்த நாள் விழாவுக்காக பாம்பன் சங்கர் ( சங்கர் குமார் க) எழுதிய கவிதை.... நீண்ட  காலத்துக்கு பிறகு இன்றுதான் கிடைத்தது... இதோ...... முத்தமிழ் அறிஞரே.. முத்துவேலர் மைந்தரே... தமிழ்தாயின் தலைமகனே.. தமிழினத்தின் தலைவனே.. உண்மைக்கு எதிரான சக்திகளை உடைதெறிந்த உத்தமனே... ஆதிக்க நெறியோர்க்கும் அதிகார வெறியோர்க்கும் அச்சுறுத்தல் நீரே... ஏழைகளின் இதய துடிப்பு அறிந்தவர் நீரே.. இதயத்து இன்னல்கள் களைந்தவர் நீரே.. சங்கத்தமிழ் சங்கமிக்கும் உன் நாவினிலே.. சத்தியம் தவறாமை காணுகையில் தமிழன்னையே.. தவமிருந்து பெற்ற தலைமகன் நீர் என்று தெளிவாயிற்று... கருணையும் நீதியும் பெயரிலே இணையப்பெற்றது உன் பிறப்பின் சிறப்பாயிற்று... அரியணை அமர்ந்து நீ ஆற்றிய பணி.. அ...

பள்ளி குழந்தை:vs தொழில் குழந்தை:

பள்ளி குழந்தை:   பாட மூட்டை தேவையில்லை பாஸ் பெயிலென கவலையில்லை   தேர்வுகள் ஏதுமில்லை - இவர்க்கு தேவையில்லாத குழப்பமில்லை   வேலைக்கேற்ப  வெகுமானம்   விரும்பும்போது விளையாட்டு   பிரம்பு கண்டு பயமுமில்லை   பிஸ்கட் பாக்சும்  தேவையில்லை தொழில் குழந்தை :   பத்திரமாய் பள்ளி சென்று   பலரோடு சிறிது பேசி   அன்னை கை சமையலிலே   அன்றாடம் சாப்பிடுகிற   அமோக  வாழ்க்கை   முதலாளி முகம் பார்க்க முன்னூறு முறை எண்ணி முன்னும் பின்னும் பயந்து நெளியும் முழு கஷ்டம் ஏதுமில்லை 1 ரூபாய் அதிகம் கேட்டு  ஓனரிடம் அடிவாங்கி அதன் பின்னர் பணம் வாங்கி  அந்த ஓரூ ரூபாய்க்கும் அப்படியே மருந்து வாங்கி  ஒத்தடம் கொடுக்கிற ஓயாத் துயரில்லை. சிரிப்பின் சாயலை  சிரிப்போரை பார்த்து மட்டும்    இப்படித்தான் சிரிப்பதேன   எண்ணிப்பார்த்து கொள்ளுகிற சிரிப்பாய் சிரிக்கும் பிழைப்பு இது.   பள்ளி குழந்தை: விடைத்தாள் வந்ததும்   வீட்டுக்கு பயந...