இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

EIA 2020: சில கேள்விகளும், பதில்களும்

படம்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெரும் பேசுபொருளாக மாறியிருக்கின்றது சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (Environmental Impact Assessment draft 2020 - EIA 2020 )இன் மீதான விமர்சனங்கள். இந்நிலையில் EIA 2020 குறித்த எளிய கேள்வி பதில்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது. EIA என்றால் என்ன? ஒரு தொழிற்சாலையோ, நிறுவனமோ, சுரங்கமோ அணையோ மற்றும் இன்னபிற எந்த தொழில்முறைக் கட்டுமானங்களும் நிகழும்போது, அதன் சுற்றுப்புறத்தில் என்ன மாதிரியான தாக்கங்கள் நிகழும் என்பதைப் பொறுத்து அனுமதி வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சட்டம் சூழலியல் தாக்க மதிப்பீடு என்று அழைக்கப்படுகிறது. புதிய தொழிற்சாலைகளால் ஒரு நாட்டின் வளம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்தச் சட்டம் விதிகளை வரையறுக்கிறது. சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 என்றால் என்ன? 1994ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் கால மாற்றத்துக்கு ஏற்ப மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டு வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான புதிய வரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சூழலியல் தாக்க மதிப்பீடு 20