இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதியன விரும்பு

படம்
                        புதியன விரும்பு           “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது நன்னூல் விதி . இந்த விதியின் பயனாக அனைவரும் எண்ணுவது பழையவைகள் அழிக்கப்பட்டு புதியவைகள் வரவேண்டும் என்பதாம். என்னடா இது? ஏதோ பழைய புராணம் பாடத் தொடங்குகிறானே என்று என்ன வேண்டாம். பழமையும் புராணமும் அவ்வளவு சலிப்பு தருபவை அல்ல. நம் எட்டயபுரத்து புரட்சியாளன் பாரதி சொன்ன அறிவுரைகளாம் புதிய ஆத்திசூடியின் அறிவுரைகளின் மொத்த கரு என்னவென்றால் மனிதன் பழைய நிலைமாற்றி புதியதோர் மனிதனாக மாறி சமுதாய அக்கறையுடன் கூடிய வல்லவனாக திகழ வேண்டும் என்பதாகவே இருக்கிறது]..          புதியன விரும்பு என்பதை வெறும் வாய் வார்த்தையாக சொல்லிவிட்டு போனவனல்ல பாரதி. அதுபோல வாழ்ந்து கட்டியவன் . பலரின் கேலிக்கு மத்தியிலே புதுகவிதை என்கிற பெருவரத்தை தற்கால இலக்கிய உலகிற்கு அருளி செய்தான். யாப்பரியா புலவனென்று பிறர் சொன்ன போதும்கூட, இலக்கண விதிகளுக்கு உட்பட்டு கருத்தை சிதைப்பது என்கிற பழைமையை மாற்றி கவிதை உலகிற்கு புது இலக்கணம் படைத்து தந்தான். ஆனாலும்  புதியன விரும்பிட விளைந்தானே ஒழிய பழைமையை பழித்தானில்லை           பழை

தமிழால் இணைவோம்

படம்
18.06.17 அன்று தமிழ் இலக்கிய பூங்கா நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற தமிழால் இணைவோம் என்ற தலைப்பிலான கவிதை.. தலைமை:பாவலர்#பாக்கம்_தமிழன் அன்னைத் தமிழே நின்னை மறக்கிலேன் நீ இல்லாமல் எப்படிநான் தனித்திருப்பேன்? நீ இல்லாது போனால் நான் தவித்திருப்பேன்? தேடியேனும் உனைகற்று களித்திருப்பேன்-அந்த தேவாமிர் தம்போலே இனித்திருப்பேன் உச்சப் புகழுற்று ஊரார்   மெச்சத் தகு அருந்தமிழே -நான் கச்சதீவு அருகிருந்து    கன்னித்தமிழ் பருகி -மேலோர் கற்பனையில் கசிந்துவந்த     மிச்சத் தமிழ்ப்பருகி மீட்டுகிறேன் கவியான்று     கேட்டிடுவீர் செவிகொண்டு.... தமிழால் இணைவோம் தரணியிலே நாம் பிரிந்தால் தானே இணைவதற்கு.. பேச்சுக்கு நன்று பேருண்மை அன்று அதுசொல்லி இன்று -தமிழால் இணைந்திடுவோம் வென்று. பிரிந்தோம் என்பது அறிந்தால் அறிந்தால் அதுபின் தெரிந்தால் தெரிந்தால் தெரிந்தது புரிந்தால் புரிந்தது புலப்பட்டு தெளிந்தால் முட்டவரும் தடையெல்லாம்   முட்டிமோதி அணையலாம் மொழிஎன்ற புதுஉணர்வால்   தமிழாலே இணையலாம் பொதுப்பண்பு எதுவென்று   புரியாமல் போனார் -சிலர் புரிந்தாலும் எதற்கென்று   வழிமாறிப் போ

நல்லதே நடக்கட்டும்

படம்
11.06.2017 அன்று சென்னை எழில் இலக்கிய பேரவை நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற நல்லதே நடக்கட்டும் என்ற தலைப்பிலான கவிதை.            நல்லதே நடக்கட்டும் எழில்மிகு சென்னை நகரினி லேயின்று எழிலிலக் கியப்பே ரவையினி லேவந்து அருவிபோல் அறிவுடை கவியோரே அவையோரே குருவிநான் என்கவியால் வணங்கு கின்றேன்.. தலைவலி தீர்ந்தால் நல்லது தான் தலைவலிக்கா நாளெல்லாம் நல்ல நாளா? கையிருப்பு காசெல்லாம்           கணினிக்குள் நுழைந்தே நம் பையிருப்பில் அடங்காமல்           பாரதத்தை வளர்த்துவர, ஏடறியா ஏழைமுதல்           எல்லோரும் ஈறாக கார்டு போட்டு காசுபார்க்கும்            நாடு நன்னிலை அடையட்டும் நல்லதே இங்கு நடக்கட்டும் குடிகெட்ட விவசாயி         மனம்கெட்டு தினம்சாக அதுகேட்ட மனமிங்கு         நெறிகட்டி வலிமேவ எதில்முட்டி நான் சாக          தெரியாமல் திண்டாட தறிகெட்ட பலரிங்கு           கிரிக்கெட்டை கொண்டாட பொல்லாத நிலைமாறி            எப்போது சரியாக, எல்லாரும் பிழை என்றால்             எதைசொல்லி நான் நோக.. கண்ணெதிரே செத்தவனை        என்னயென்றுங் கேளாமல் கென்னியாக்கு நிதி கொடுத்தால்         என்னி

வைரமுத்து வைரமுத்து தான்

.வாடிவாசல் திறந்துவிடும்வாழ்த்துகிறேன் தம்பி - இனிகோடிவாசல் திறக்கும்உன்கொள்கைகளை நம்பிதலைவர்களே இல்லாதகட்சியொன்று காட்டி - ஒருதலைமுறைக்கே வழிசொன்னீர்தமிழினத்தைக் கூட்டிஅடையாளம் தொன்மங்கள்அழிக்குமொரு கூட்டம் - உங்கள்படையாழம் பார்த்தவுடன்பயந்தெடுத்த தோட்டம்பீசாவும் பெப்சியுமேஇளைஞர்கள் என்று - வாய்கூசாமல் சொன்னவரைக்கொன்றுவிட்டீர் கொன்றுசொல்வாங்கி எல்லாரும்சூளுரைத்த பாட்டு - கடல்உள்வாங்கிப் போனதடாஉங்கள்குரல் கேட்டுஒருகொம்பு ஆணென்றால்மறுகொம்பு பெண்தான் - அந்தஇருகொம்பின் மத்தியிலேஇடுங்கியது மண்தான்தண்பனியால் சுடுகதிரால்தமிழினமா சாகும்? - அடதண்ணீரில் வீழ்வதனால்வெயில்நனைந்தா போகும்?தெருவிருந்து போராடத்திறம்தந்தார் தமக்கும் - உம்மைக்கருவிருந்து பெற்றாரின்கால்களுக்கும் வணக்கம்சதுராடிக் களம்கண்டசகோதரிகாள் வணக்கம் - உங்கள்எதிர்காலக் கருப்பைகள்நெருப்பைத்தான் சுமக்கும்காளைகளை மீட்டெடுக்கக்களம்கண்ட கூட்டம் - இனிநாளைகளை மீட்டெடுக்கநாணில்அம்பு பூட்டும்வரம்புகளை யார்விதித்தார்வரட்டுமொரு யுத்தம் - எங்கள்நரம்புகளில் ஓடுதடாராஜ ராஜ ரத்தம்போராடிச் சாதித்துப்புகழ்கொண்டீர் யாண்டும் - இனிச்சாராயம் குறித்தும்நீ

எப்போது மகிழ்ச்சி

படம்
காஷ்மீரில் அமைதி வந்து கூடும்போது காவிரியும் தமிழகத்தில் ஓடும்போது இலங்கையிலே போரெல்லாம் ஓயும்போது இந்தியாவின் குழப்பமெல்லாம் மாயும்போது மீனவர்கள் நிம்மதியை நாடும்போது மாணவர்கள் மகிழ்ச்சியிலே ஆடும்போது சிட்டியிலே மனிதத்தை தேடும்போது சின்னபுத்தி இல்லாதோர் வாழும்போது கருணை இல்லம் இல்லாமை காணும்போது பெத்தவனை பெத்தபுள்ளை பேணும்போது இன்னும் சொல்ல என்னென்னவோ இருக்கும்போது-பேட்டரி சார்ஜ் இன்றி என்னுயிரை வாங்கும்போது மொத்தமாய் ஒன்றுசொல்ல எண்ணும்போது சத்தமில்லா தமிழகத்தை சகநாட்டார் காணும்போது சவகுழியில் கிடந்தாலும் சந்தோசம் கொள்வேன் நான். #என்று_தணியும் என்றும் அன்புடன் உங்கள் மு.பிரசாந்த் 7299585174 youngerindia2020@gmail.com

கே டி மனம் (#காத்திருப்பு)

காத்திருப்பது சுகம் என்பது முன்னோர் சொல்லி வைத்தது.அந்த சுகானுபவம் இன்று நிறைய கிடைத்தது. ஆனால் வெறுமனே காத்திருப்பது என்பதை போன்ற வெறுப்பான சுகம் வேறெதுமில்லை .இது என் அனுபவம் இன்றெனக்கு அளித்த அறிவு. வேலைகள் நிறைய நிலுவையில் மட்டுமே கிடக்க, அவற்றை பிறகுதானே செய்ய முடியும் என்கிற சமாதானத்தை தந்து என் சோம்பேறித்தனத்துக்கு இந்த காத்திருப்பும் கை கொடுக்கிறது.. ஒருவகையில் இதுகூட நல்லதுதான் போலும். வேலை இருக்கிறது வேலை இருக்கிறது என்று யாரோ சொன்ன வேலைக்காக என்னை நானே அர்ப்பணித்து கொள்வதை விடவும், வேலை இல்லை என்றால் படிக்கிறேன் பேர்வழி என்று யாரோ ஒருவர் சொன்னதை தெரிந்துகொள்ள முயற்சிப்பதை விடவும் இந்த வெறுமனே காத்திருக்கும் வேளையில் என் சிந்தை என் பார்வையில் உலகத்தை யோசிக்க தொடங்குகிறது என்பதும் லாபமாக தான் இருக்கிறது. பார்த்தீரா..என் சோம்பேறித்தனத்துக்கு  இரைபோட்டு இசைந்துகொடுக்கும் இந்த காத்திருப்புக்கு வக்காலத்து வாங்க தொடங்கிவிட்டது என் மனம்..கே டி மனதாயிற்றே...                                                 என் போர்க்கால ஆயுதங்களாம் பேனாவும் காகிதமும் கைவிட்டு பை  எனும் உறை

அழகி

படம்
அழகெனும் சொல் அது உலகினில் பிறந்தது அன்பே அன்பே உனக்காக வாழ்விலும் சரி இனி சாவிலும் சரி அடி என் காதல் என்றென்றும் உனக்காக அடி நீகூட அதுபோல எனக்காக வீண்பேச்சு விடு விடு விரல்கொண்டு தொடு தொடு விளையாட்டாய் வித்தைகள் செய்திடுவேன் காச்சு மூச்சு சத்தம் விட்டு மூச்சழுந்த முத்தமிட்டு என் மார்பில் உன் காதல் பதித்திடுவேன் தோள்சாய்ந்து நீ -உன் மேல்சாய்ந்து நான் மனம் ஏதேதோ கதைபேச எண்ணம் கொள்ளுதே ஆனாலும் நீ எந்தன் அருகில் வந் தால் மனம் தட்டி தடுமாறி என்னை தள்ளுதே.. தேனாக நானிருக்க தேன்குளவி நீயிருக்க வீணாக எதுக்கினி வம்புவழக்கு மானாக நீயிருக்க மலைப்பாம்பு போல உன்ன மனசார நா விழுங்க நேரம் ஒதுக்கு. வேண்டாத எண்ணங்கள் வேணாமே செல்லம்-நீ ஓகே னு சொன்னா மனம் உல்லாசத்தில் துள்ளும்......... .......... ...... . .......     ஆல்பம் ஒன்றிற்காக எழுதியுள்ளேன்..மற்றபடி எந்த நோக்கத்திலும் இட்ட பதிவு அல்ல.. ஆல்பம் வெளியான பின்பு முழு பாடலும் பதிவிடுகிறேன். நன்றி 7299585174 prasanthraman30@gmail.com