இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விருப்பம்

படம்
வேண்டாப் பொருளே என்றாலும்      இல்லை யென்றால் விருப்பம் ஆசை தீபம் அனையா தெரியத்      தூண்டுந் திரியே விருப்பம். ஆடவனின் வன்மைமேல்     அணங்குக்கு விருப்பம். அணங்கவளின் மென்மைமேல்     ஆண்மைக்கும் விருப்பம். நாற்காலி அடையமட்டும்     எல்லோர்க்கும் விருப்பம் நல்லாட்சி புரிவதற்கு     யாருக்கு விருப்பம்....... ஆசை வந்து தொலைத்து விட்டால்      அடையும் வரையில் விருப்பம் அவரிடமில்லா அனைத்தின்மீதும்      அவக் காச்சியாய் விருப்பம். ஐம்பது ரூபாயில் கண்ணதாசனின்  அழியாக்காவியம்     ஒட்டுமொத்த உலகம் இயங்க      ஒற்றை சூத்திரம் விருப்பம். உலகம் என்னும் நாடக மேடையில்      உயர்ந்த பாத்திரம் விருப்பம்.                                 -பாம்பன் மு.பிரசாந்த்

ஆணா ?பெண்ணா ?

படம்
கட்டிலிலே ஆடவன்தான் ஆதிக்கமா?-இந்த ஆதிக்கத்தால் சமஉரிமை பாதிக்குமா? இயற்கை நம்மை இப்படியும் சோதிக்குமா?-இதை பின்தொடர்ந்தால் இந்த உலகம் சாதிக்குமா? சரிபாதி பெண்ணென்ற         நிலை வேண்டுமே-அதை சரித்துப் பேசிடாத         தலை வேண்டுமே சரிபாதி தரமறுத்து        சண்டையிடும் மனிதா? அவள் சரிபாதி இல்லையெனில்       உயிர்வாழ்வது எளிதா? உறுப்பில் பிரிவினையா?       உணர்வில் பிரிவினையா? அடுப்பென்ன விறகென்ன       இணைந்தால்தான் வாழ்வு அதுகூட புரியாவிடில் ....... இப்படியே சாவு....  -பாம்பன்.மு.பிரசாந்த் அழியாத எண்ணங்களால் மனதில் நிலையாக வாழுகின்ற கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்  மிகக்குறைந்த விலையில்  35 ரூபாய் மட்டுமே...