இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விருப்பம்

படம்
வேண்டாப் பொருளே என்றாலும்      இல்லை யென்றால் விருப்பம் ஆசை தீபம் அனையா தெரியத்      தூண்டுந் திரியே விருப்பம். ஆடவனின் வன்மைமேல்     அணங்குக்கு விருப்பம். அணங்கவளின் மென்மைமேல்     ஆண்மைக்கும் விருப்பம். நாற்காலி அடையமட்டும்     எல்லோர்க்கும் விருப்பம் நல்லாட்சி புரிவதற்கு     யாருக்கு விருப்பம்....... ஆசை வந்து தொலைத்து விட்டால்      அடையும் வரையில் விருப்பம் அவரிடமில்லா அனைத்தின்மீதும்      அவக் காச்சியாய் விருப்பம். ஐம்பது ரூபாயில் கண்ணதாசனின்  அழியாக்காவியம்     ஒட்டுமொத்த உலகம் இயங்க      ஒற்றை சூத்திரம் விருப்பம். உலகம் என்னும் நாடக மேடையில்      உயர்ந்த பாத்திரம் விருப்பம்.                                 -பாம்பன் மு.பிரசாந்த்

ஆணா ?பெண்ணா ?

படம்
கட்டிலிலே ஆடவன்தான் ஆதிக்கமா?-இந்த ஆதிக்கத்தால் சமஉரிமை பாதிக்குமா? இயற்கை நம்மை இப்படியும் சோதிக்குமா?-இதை பின்தொடர்ந்தால் இந்த உலகம் சாதிக்குமா? சரிபாதி பெண்ணென்ற         நிலை வேண்டுமே-அதை சரித்துப் பேசிடாத         தலை வேண்டுமே சரிபாதி தரமறுத்து        சண்டையிடும் மனிதா? அவள் சரிபாதி இல்லையெனில்       உயிர்வாழ்வது எளிதா? உறுப்பில் பிரிவினையா?       உணர்வில் பிரிவினையா? அடுப்பென்ன விறகென்ன       இணைந்தால்தான் வாழ்வு அதுகூட புரியாவிடில் ....... இப்படியே சாவு....  -பாம்பன்.மு.பிரசாந்த் அழியாத எண்ணங்களால் மனதில் நிலையாக வாழுகின்ற கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்  மிகக்குறைந்த விலையில்  35 ரூபாய் மட்டுமே...                                                        

Multilingualism

A man is equal to the no of mans as the no of languages he known                                                                                     -Neithalaar           really it is a fact that proves the reality of the human life.having love and determination about their mother languages is not a problem.But the actual problem is the hesitation of learning other languages because of the determination on it.

ஏழையின் சிரிப்பில்

ஏழையின் சிரிப்பில் இறைவன் உள்ளான்.. உண்மைதான்..ஆனால் இங்கே ஏழை சிரிக்கவும் வாய்ப்பில்லை. ஆக, இறைவன் இருக்கவும் வாய்ப்பில்லை                                                          கவி. மோகன்

தமிழ். கவி.மோகன் கவிதைகள்

அழியும் மொழிகளில் தமிழுக்கு         எட்டாவது இடம் - இன்னும் சில ஆண்டுகளில் எல்லோர்க்கும்         அது எட்டாத இடம்                                -கவி.மோகன்

அனிதாவையும் மறப்போம்..ஆதித்யா கண்டு சிரிப்போம்

படம்
அட என்னடா இது. ஒண்ணுமேல ஒன்னு பிரச்சனை வந்துட்டே இருக்கு.மன அமைதி இல்லாத சலன நிலையிலேயே இருப்பதாக உணர்கிறேன். அப்படி என்னதான் பிரச்னை வருது.. ந ஒண்ணும் என் சொந்தக்கதை சோகக்கதை சொல்லலீங்க. தமிழனா பொறந்த ஒவ்வொருத்தரும் நெனச்சு நெனச்சு வெக்கப்படவேண்டியத சொல்றேன்.நல்ல தூக்கம் திடீர்னு ஒரு கெட்ட கணவால கலைஞ்சு போச்சுன்னு வெச்சுக்குங்க அப்புறம் நிம்மதியா                                      buy it and read at optimal cost... தூங்க முடியுமா.மனசு படபடனு ஒரு அதிர்ச்சியோடே இருக்கும் இல்லையா, அது போன்ற உணர்வை நிரந்தரமாகவே பெற்றிருக்கும் வரம் பெற்ற கூட்டம்தான் தமிழகமக்கள்(வாக்காளர்கள்). பின்ன என்னப்பா...சும்மா ஏதாவது பிரச்னை உண்டாக்கிட்டே இருந்தா என்ன மைசூருக்கு எங்களுக்காக ஆளுறோம்னு சொல்லிக்கிட்டு ஒரு அரசாங்கம். நடந்த பிரச்சனைகளை லிஸ்ட் போட்டு அப்படி இப்படி தாட் பூட் தஞ்சாவூர் னு பேசுறதுல வேலையே இல்லீங்க.என்னதான் முடிவு இதுக்கு. இதுவே கடைசி உயிராகட்டும் கடைசி உயிராகட்டும்னு சொல்லி சொல்லி பல பேர இழந்துட்டோம். இதற்குமேலும் அதே முட்டாள்தனத்தை செய்தால் உண்மையில் நாம்தான் ஏமாளிக் கோமாளிகள்.   

I லவ் songs. பட் நாட் நவ் ( ஐ love சாங்ஸ்.but not now)

அந்தியில வானம். சுந்தரரே வாரும் சதிராட்டம் சிந்து படிக்கும்.... மாலை நேர காத்து வந்து வீச மச்சான் மேல ஆசை கொண்டு பேச.... எருக்கஞ்செடி யோரம் ...... தூதுவளை இலை அரைச்சு..டொய்ங்.. தொண்டயில தான் நனைச்சு.. டொய்ங். இன்னும் பல  இன்னும் பல இத்யாதி இத்யாதிகள் எல்லாம் ....... அடக் கடவுளே.... இந்த பஸ் ஒனர்களுக்கும் டிரைவர் கண்டக்க்றர்களுக்கும் வேற பாட்டுகளே கிடைக்காதா ? இல்ல. மத்த புது சினிமா பாட்டெல்லாம் போட்டா சாமிகுத்தமா ? அதெப்படி எல்லாரும் ஒரே மாதிரி டெம்ப்ளேட் வெச்சு பாட்டு போடுறாங்க..sobba.. அ.அ.அ. முடியல... இல்லப்பா அதெல்லாம் அவன் அவன் இஷ்டம்.அவன் அவனுக்கு புடிச்சத அவன் கேக்குறான் னு சொல்றீங்களா.. அப்போ நான் கேக்குறேன்... அவனுக்கு விருப்பமான பாட்ட கேக்குறதா இருந்தா அவன் வீட்ல போட்டுல்ல கேக்கணும்.எல்லாரும் இருக்குறப்ப கேட்டு எங்களையும் வெறுப்பேத்தி வெங்காயம் உரிக்கிறதா?.. Sorry ங்க. நா headset கொண்டு வர மறந்துட்டேன். அதான் இவ்ளோ புலம்பல்.ஆக உங்களுக்கெல்லாம் ஒரு சின்ன அனுபவ பாடம். ஊருக்கு போறப்ப headset மறக்காம எடுத்துட்டு போங்க.. சரி சரி பை. அடுத்த பாட்டு போட்டுட்டான்.. தி

விடிந்ததா?விடியலயா?

படம்
             வித்யாசமான தலைப்புகளை பார்க்கும்பொழுது வருகிற சிரிப்பை விட அலாதியான சுவாரஸ்யம் அப்படி ஒரு தலைப்பை  நேரடியாக நாமே சந்திப்பதில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக  "போங்கடி நீங்களும் ", "மொசரக்கட்டை","விரலா? வீக்கமா?" போன்ற தலைப்புகள் அந்த அனுபவத்தை ஏற்கனவே தந்தவை. அதே போன்ற தலைப்புதான் இதுவும் கூட.எதோ தூக்க கலக்கத்தில் 3 மணிக்கு எழுந்து கேட்கிற கேள்வியை தலைப்பாகவே தந்து விளையாடிய ஆவடி எழில் இலக்கிய பேரவைக்கு நன்றி. 13.08.17 அன்று ஆவை எழில் இலக்கிய பேரவை நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை. தலைப்பு:விடிந்ததா?விடியலயா? கேள்விகளை ஆகூதியாக்கி        விடைகளை பிராப்தம் பெற வேள்வி நடத்தும் பேரவையே ! வெடிவைத்து தகர்த்தாலும்     வெட்டுறாத பாறை-சிறு தட்டுளிக்கு  கட்டுப்  படும்             (அன்றேல்) பசுமரத்து வேரோடி      பலமான பாறைகூட பாதியாக வெட்டுப் படும். மரத்துக்கும் தோல்வி மலைக்கும் தோல்வி விடியல் யாருக்கு...... .? தானாக உடைந்ததை தனித்தனியே உடைத்தெடுத்து வியாபாரம் செய்பவர்க்கு விடியல் இது. விடிந்ததா ?விடியலயா? வாதையால் பிர

என்னை அறிந்தால்

படம்
என்னை அறிந்தால் ஒரு தடையும்  வழியில் இல்லை-இலக்காக விண்ணை அறிந்தால் காதல்முறிவு  காணாமல்போகும்-சரியாக பெண்ணை அறிந்தால் ஓடி ஓடி ஊர்முழுக்க சொத்து பத்து சேர்க்கமாட்டான் கடைசியான 6 அடி மண்ணை அறிந்தால் அறிதோறும் அறியாமை அறிந்தவர் யாரோ அறிவாளி அவரென்று அகிலம் சொல்லும்-இதை அறியாதார் மடையரென்றும் அதுவே சொல்லும். ஆடும் வரை ஆடிவிட்டு காடு தேடி ஓடும் கூடு என்ற உண்மை மட்டும் உணர்ந்திருந்தால் போதும். என்றும் அன்புடன் உங்கள் பாம்பன் மு பிரசாந்த் 

யார் இந்த தமிழ்மகன் குழந்தையா கொடுங்காற்றா

படம்

கேடி மனம் ( #நேரம் தவறாமை )

நேரம் தவறாமை பெயரிலேயே ஆமை இருக்கிறதே.பிறகெப்படி வேகம் எதிர்பார்ப்பது.முதலில் பெயர் மாற்ற வேண்டும். நேரம் தவறா முயல் என்று.பொதுவாக குறித்த இடத்திற்கு குறித்த நேரத்திற்கு வரும் மனிதர்களை பாராட்ட வேண்டியதில்லை.அதுதான் இயல்பாக இருக்க வேண்டிய பண்பு..ஆனால் இப்போதெல்லாம் பாராட்டும் போதே இவர் குறித்த நேரத்திற்கு வரும் பழக்கம் கொண்டவர் என்றும் கூட சேர்த்து பாரட்டுவதை நேரடியாகவே காண முடிகிறது.. சரி..எப்போது இந்த பழக்கம் தொடங்கியது...ஒரு ஆய்வு செய்து பார்ப்போமா ? . என் எண்ணம் என்ன என்று சொல்லுகிறேன்.எழுத்து வழியாக ஏதோ சொல்ல வேண்டும் என்பதைற்காக இல்லாமல் எல்லோற்கும் எளிமையாக புரியும்வண்ணம் அமைய வேண்டும் என்பதால் இப்படி செல்கிறேன்.ஒருவேளை உங்களுக்கு ஒத்து வந்தால் ஏற்றுகொள்ளுங்கள் அன்றேல் நேரம் தவறா முயலாக உங்கள் அடுத்த வேலையை செய்ய கிளம்பி விடுங்கள்...சரி சிந்திக்க தொடங்கலாமா....உலக மக்கள் எல்லோரும் சரியான நேரத்தில் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்க. அப்போது ஒரு விழாவிற்கு பெரிய மனிதர் ஒருவரை அழைத்திருந்திருப்பார்கள் எதோ உண்மையான காரணம் ஒன்று இருக்க,அவர் தாமதமாக வந்திருப

வானமே எல்லை

பெரம்பூர் கவியரங்கம்... இலக்கியவானம் அமைப்பு நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற நம் கவிதை.. தலைப்பு..வானமே எல்லை ஓங்குயர் புகழ்ப்படைத்த தமிழேடுத்து நல்ல பாங்குடை கவிசொல்ல இங்குவந்தேன். எல்லையிலா ஏறுபுகழ் தமிழே உன் சொல்வாங்கி வானமே எல்லையென்று கவிபாட எனைவாழ்த் தடி எல்லை ஒன்று இல்லை என்று     ஏதும் இங்கே இல்லை.. பூமியிலே மாந்தர்செய்யும்      புதுமுயற்சிக் கெல்லாம் பூதலத்தோர் கண்ணில்படும்       வானமொன்றே எல்லை.. கடைக்கோ டியிலே கடலும் வானும்    இணைவது போலே தெரிகிறது எட்டிப் பிடித்து தொட்டிட போனால்.    இன்னும் இன்னும் நீள்கிறது.. வானம்ஒன்று இல்லை இருந்    தாலும் இங்கே இல்லை இல்லாததை எல்லையாக்கி     வெற்றி தேடி ஓடு -நீ வானளாவு புகழ்பெறுவாய்      வாழ்த்திடும் இந் நாடு..           என்றும் அன்புடன           உங்கள் பாம்பன் மு பிரசாந்த்

சொந்தமாய் ஒரு சொர்க்கம்

படம்
சொந்தமாய் ஒரு சொர்க்கம் தமிழ் வணக்கம்: அந்தரத்தின் அந்தரமே சுந்தரத் தேன்தமிழே வந்தெனக்கு நற்றமிழை தந்திடடி நாவினிலே ... தமிழே !!!! வினைசெய்த பயனால் இங்கு                        பிறந்திருக்கிறேன் இணையில்லா உனைத் தாயாய்                        அடைந்திருக்கிறேன் துணைசெய்து உனைஉயர்த்த                        துணிந்திருக்கிறேன் -இந்த துர்பிறப்பு அதற்குத்தானே                        பிறந்திருக்கிறேன் .. சுகமென்ற ஆனந்தம்    சொர்க்கத்தில் உள்ளதென்றால் அகமகிழும் ஆனந்தம்    அது என்ன வீணா?? தக தக வென கதிர்கொதித்து      புவிவெப்பம் பொங்கும்போதும் குளுகுளுவென வாழும்நிலை      சொந்த சொர்க்கமே.. தனிவீடு தானின்றி   தார்ச்சாலை வீடாக தன்குடும்பத் தோடுவாழும்    புன்மனது வறியவனின் அரைவயிற்று அருங்குடும்பம்   குறைவயிற்று கூழ்குடித்து கொஞ்சம் சிரிப்பதுவும்    சொந்த சொர்க்கமே சல்லிக்கட்டு வேண்டி அன்று     சுள்ளிக்கட்டின் வலிமைபோல துள்ளிக் கட்டி கூடி உண்மை     சொல்லிக்காட்டி வென்ற பொது சொந்தமான சுவர்க்கம் ஒன்று    வந்த இன்பம் வந்ததே ...     போராட்ட பெண்களுக்கு க

கவிதாஞ்சலி (கவிக்கோ)

படம்
மறைந்த ஐயா கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்காக கவிதை சிறகுகள் அமைப்பு நடத்திய கவிதாஞ்சலி கவிதை... மதம் கடந்து மனித பண்புகளோடு மல்லாந்த முகத்தோடு அனைவரையும் எதிர்கொள்ளும் பண்பாளர்.சிறந்த இலக்கிய வாதி ..ஆகச்சிறந்த கவிஞர்,பேச்சாளர்,எழுத்தாளர்,சிந்தனையாளர்,.. மொத்தத்தில் தமிழக இலக்கிய உலகில் முத்திரை பதித்து இருக்கக்கூடிய இலக்கிய ஆளுமை...என்போன்ற ரசிகர்களுக்கும் சரி, நல்ல ரசிகர்களுக்கும் சரி, இவர் படைப்புகள் தீனி போட்டு திருப்திப்படுத்தும் என்பதில் ஐயமில்லை ....      #  கவிதாஞ்சலி  பால்வீதி பார்க்க சென்ற      படைப்பாளி ஒருவருக்கு, கடவுளை காணச்சென்ற-என்        கவிதை கடவுளுக்கு  காதலாகி கசிந்துருகி       கண்ணீர் மல்க கவிதாஞ்சலி  தவிக்கும் மனதுக்கு     தாய்தமிழல் மருந்திட்டு  செவிக்கோர் விருந்தாக     தீந்தமிழை தந்தளிக்கும்   புவிக்கோர் நாயகன் என்      கவிக்கோவின்  காலடியில்  கண்ணீரை சேர்த்தவாறு      காலம் கடத்த நான்  கற்றுக்கொண்   டிருக்கிறேன்  சொல்லும் சொல்லில்   வெல்லும் சொல்லை  சொல்லிச் சொல்லி    வெல்லும் கலையால்  துள்ளும் மனத

மது செய்யும் மாயம்

படம்
  தமிழ்நாடு திருவள்ளுவர் காலை இலக்கிய மன்றம் நடத்திய கவியரங்கில் இடபெற்ற மது   செய்யும் மாயம் என்ற தலைப்பிலான கவிதை ..                   மது செய்யும் மாயம் தமிழ் வணக்கம் : தமிழே ..!! நீ இல்லாமல் எப்படி நான்                  தனித்திருப்பேன் நீ இல்லாது போனால் நான்                   தவித்திருப்பேன் தேடியெனும் உனைக்கற்று                   களித்திருப்பேன் - அந்த தேவாமிர் தம்போலே                   இனித்திருப்பேன் ... உச்சப்புகழ்   பெற்றுலகம்         மெச்சத்தகு அருந்தமிழே - நான் கச்சத்தீவு அருகிருந்து         கன்னித்தமிழ் பருகி - மேலோர் கற்பனையில் கசிந்து வந்த        மிச்சத் தமிழ் பருகி மீட்டுகிறேன் கவியொன்று        கேட்டிடுவீர் செவிகொண்டு . மது செய்யும் மாயம் : மாதை தொடும்போது       மனதிலோர் மாயம் . வாதை வரும்போது      உடலிலா மாயம் போதை புகும்போது       என்னென்ன மாயம் உன்னாலே பலருக்கும்       மனதளவில்   காயம் இது மது செய்யும் மாயம் . மதியிழந்து

புதியன விரும்பு

படம்
                        புதியன விரும்பு           “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது நன்னூல் விதி . இந்த விதியின் பயனாக அனைவரும் எண்ணுவது பழையவைகள் அழிக்கப்பட்டு புதியவைகள் வரவேண்டும் என்பதாம். என்னடா இது? ஏதோ பழைய புராணம் பாடத் தொடங்குகிறானே என்று என்ன வேண்டாம். பழமையும் புராணமும் அவ்வளவு சலிப்பு தருபவை அல்ல. நம் எட்டயபுரத்து புரட்சியாளன் பாரதி சொன்ன அறிவுரைகளாம் புதிய ஆத்திசூடியின் அறிவுரைகளின் மொத்த கரு என்னவென்றால் மனிதன் பழைய நிலைமாற்றி புதியதோர் மனிதனாக மாறி சமுதாய அக்கறையுடன் கூடிய வல்லவனாக திகழ வேண்டும் என்பதாகவே இருக்கிறது]..          புதியன விரும்பு என்பதை வெறும் வாய் வார்த்தையாக சொல்லிவிட்டு போனவனல்ல பாரதி. அதுபோல வாழ்ந்து கட்டியவன் . பலரின் கேலிக்கு மத்தியிலே புதுகவிதை என்கிற பெருவரத்தை தற்கால இலக்கிய உலகிற்கு அருளி செய்தான். யாப்பரியா புலவனென்று பிறர் சொன்ன போதும்கூட, இலக்கண விதிகளுக்கு உட்பட்டு கருத்தை சிதைப்பது என்கிற பழைமையை மாற்றி கவிதை உலகிற்கு புது இலக்கணம் படைத்து தந்தான். ஆனாலும்  புதியன விரும்பிட விளைந்தானே ஒழிய பழைமையை பழித்தானில்லை           பழை