வழிச்செலவா?வழிப்பறியா?

வழிச்செலவா?வழிப்பறியா? யானை விலை குதிரை விலை சொல்வது என்றெல்லாம் கேள்விபட்டிருக்கிறோம் அதற்கு எடுத்துக்காட்டு சொல்வதானால் இன்றைய குழந்தைகட்கு பயணவழி உணவகங்களை காட்டித்தான் சொல்லவேண்டும். அப்படி பணம்பிடுங்கும் ஆலைகளாக மாறிவிட்டிருக்கின்றன அவை. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பது பெரியோர் வாக்கு. ஆனால் இன்றோ உண்டி கொடுத்து உயிரெடுக்கிறாரே என்கிற அளவுக்கு உணவகங்கள் மாறிவிட்டன. கடந்து வந்த காலமாற்றத்துக்கும் நடந்து கொண்டிருக்கும் நடப்புலகின் வேகத்திற்கும் ஈடு கொடுப்பதாய் எண்ணிக்கொண்டு நாமும் வாழ்க்கைமுறையை முற்றிலுமாய் துரிதப்படுத்திகொண்டே இருக்கிறோம். அப்போதெல்லாம் வெளியூர் பயணம் என்றால் வழிச்செலவுக்கென்று ஒரு குறிப்பிட்டதொகையை ஒதுக்கி திட்டமிடுவோம். அதற்குள் இந்த நொறுக்குத்தீனிகள், ஆட்டோ செலவு, பயணதொகை, உணவுசெலவு உள்ளிட்ட பலவும் அடங்கிவிடும். ஆனால் இப்போதெல்லாம் திட்டமிடவும் முடிவதில்லை. திட்டமிட்டாலும் திட்டமிட்ட தொகைக்குள் செலவுகள் அடங்குவதுமில்லை. வழிச்செலவுகளுள் ஒன்றான உணவக செலவே இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் உடைத்தெறிந்து விடுகிறது. காரணம் பயணவழி உ...