பள்ளி குழந்தை:vs தொழில் குழந்தை:



பள்ளி குழந்தை:
  பாட மூட்டை தேவையில்லை
பாஸ் பெயிலென கவலையில்லை
  தேர்வுகள் ஏதுமில்லை - இவர்க்கு
தேவையில்லாத குழப்பமில்லை

  வேலைக்கேற்ப  வெகுமானம்
  விரும்பும்போது விளையாட்டு
  பிரம்பு கண்டு பயமுமில்லை
  பிஸ்கட் பாக்சும்  தேவையில்லை

தொழில் குழந்தை:
  பத்திரமாய் பள்ளி சென்று
  பலரோடு சிறிது பேசி
  அன்னை கை சமையலிலே
  அன்றாடம் சாப்பிடுகிற
  அமோக  வாழ்க்கை

  முதலாளி முகம் பார்க்க
முன்னூறு முறை எண்ணி
முன்னும் பின்னும் பயந்து நெளியும்
முழு கஷ்டம் ஏதுமில்லை
1 ரூபாய் அதிகம் கேட்டு
 ஓனரிடம் அடிவாங்கி
அதன் பின்னர் பணம் வாங்கி
 அந்த ஓரூ ரூபாய்க்கும்
அப்படியே மருந்து வாங்கி
 ஒத்தடம் கொடுக்கிற
ஓயாத் துயரில்லை.

சிரிப்பின் சாயலை
 சிரிப்போரை பார்த்து மட்டும்   
இப்படித்தான் சிரிப்பதேன
  எண்ணிப்பார்த்து கொள்ளுகிற
சிரிப்பாய் சிரிக்கும் பிழைப்பு இது.
 

பள்ளி குழந்தை:

விடைத்தாள் வந்ததும்
  வீட்டுக்கு பயந்து
விஷக்காய்ச்சல் வேடமிட்டு
  கலக்கலாய் நடித்து
கையெழுத்து வாங்க வேண்டிய
  கட்டாயம் ஏதுமில்லை

மூளையில்  பதியவைக்க
  முதுகிலே சுமக்கிறோம்
மூட்டை தூக்கி பிழைப்பதற்கு
 முன்னோட்டம் போலும்..

தொழில் குழந்தை:
அம்மாவை விட்டுவிட்டு
  அசலூரு வந்துவிட்டேன்.
அவள் அடித்ததே காரணமாய்
  அனைவரிடம் சொல்லி வந்தேன்.
அடித்தாலும் அன்போடு
    அடுத்தவேளை  சோத்துக்கு
   அழைக்கிற அந்த பாசம்
    அப்போ எனக்கு புரியலியே.
  இங்கு:
        ஆராரோ பாடிய அவளை தவிர
    ஆராரோ அடிக்கிறார் அய்யோ  – நான்
         ஆரிடம் போய் சொல்லி அழ. 
       அய்யோ கொடுமை
        ஆண்டவா பாராயோ......!!!!

சமுதாயம்:
     ஏனிந்த  அவலமடா..
என்றிதெல்லாம் ஓழியுமடா
     பட்டம் விட்டு பாடி திரிந்து
பள்ளி சென்று பாடம் கற்று
    பாரினிலே பகலவராய்
பவனி வர வேண்டிய  - -இந்த
   பச்சிளம் பாலகரை
பணியமர்த்தி  பாடை படுத்தும்
   பாடாவதி நிலை ஒழிந்திடும்போது
பாரினை நிச்சயம் ...இப்
    பாரதம் வெல்லும் 

என்றும்  அன்புடன்   
முகவை மு பிரசாந்த்    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்