விருப்பம்

வேண்டாப் பொருளே என்றாலும் இல்லை யென்றால் விருப்பம் ஆசை தீபம் அனையா தெரியத் தூண்டுந் திரியே விருப்பம். ஆடவனின் வன்மைமேல் அணங்குக்கு விருப்பம். அணங்கவளின் மென்மைமேல் ஆண்மைக்கும் விருப்பம். நாற்காலி அடையமட்டும் எல்லோர்க்கும் விருப்பம் நல்லாட்சி புரிவதற்கு யாருக்கு விருப்பம்....... ஆசை வந்து தொலைத்து விட்டால் அடையும் வரையில் விருப்பம் அவரிடமில்லா அனைத்தின்மீதும் அவக் காச்சியாய் விருப்பம். ஐம்பது ரூபாயில் கண்ணதாசனின் அழியாக்காவியம் ஒட்டுமொத்த உலகம் இயங்க ஒற்றை சூத்திரம் விருப்பம். உலகம் என்னும் நாடக மேடையில் உயர்ந்த பாத்திரம் விருப்பம். -பாம்பன் மு.பி...