பட்டாசுப் பிஞ்சு (Pattaasu pinju )

அன்னப் பருக்கைஅள்ளி உண்ணத் தொடங்குகையில் எண்ணத்தில் வந்த தந்தச் சிவகாசி சிறுவர் நிலை கொள்ளிக் கொலைமருந்தை அள்ளிக் கையாண்டு பள்ளிப் படிப்புவிட்டு தள்ளி நின்று வாழுகிற சுட்டிக் குழந்தைகளை கட்டிக் காப்பாற்ற – எவரோடும் முட்டிப் பயனில்லை எட்டி நோக்கினால்..... வட்டிக் கடன் போட்ட குட்டியின் குட்டிகளை தட்டிக் கரைக்க எண்ணி கட்டித் தங்கங்களை சட்டிக் குதிரையாக்கிச் சாக்கடையில் தள்ளினரோ?? பள்ளித் தளமனைத்தும் கோயில் செய்யச் சொன்னதனை பகுத்தாய்ந்து பாராமல் பாரெங்கும் பணம் கொட்டி கோடானு கோடிகளாய் கோயில் செய்தது போதாதா? -இனி கோயிற் தளமனைத்தும் பள்ளி செய்வோம் – சிவகாசிப் பட்டாசுஆலைக்குள்ளும் துள்ளிச் செல்வோம் வாரீரோ ?? என்றும் அன்புடன் உங்கள் முகவை மு பிரசாந்த்... இராமேஸ்வரம்