நண்பா உனக்காக
அன்று கடலில் சிங்களப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நண்பன் ப்ரிட்சோ வின் மறைவுக்காக....
இத்துப்போன பழங்கதையால்
செத்துப்போன நண்பனை எண்ணி
கத்திக் கத்தி தொண்டத் தண்ணி
வத்திப்போச்சு பாத்தீரா ?
கண்டத்தில் பாஞ்ச குண்டு
தொண்டைக்குழி துளைக்கையிலே
துள்ளத் துடிக்க அவன்
துடிச்ச துடி புரியலையா ??
அரக்கன் மனங் கூட
அரைநொடியாவது யோசிக்குமே
அந்த நொடி சுடும்போது
அறிவுகெட்ட உன் மூள
எந்த ஒன்னுஞ் சொல்லலியா?- நீ
மனுஷன் என்பது நினைவில்லயா?
பாவிகள் தம் படைமடம் காட்ட
பாலகன் இவன கொன்னீரோ ?
சதியோ ? விதியோ ? யார்செய்த பிழையோ?
மிச்சம் மீனவன் கண்ணீரோ?
பட்டதும் போதும்
கெட்டதும் போதும்....
பார்த்துச் சகித்து விட்டதும் போதும்..
சில்லறைப் புத்திச் சிங்கள அரசே
சின்னஞ் சிறுவரை சுட்டதும் போதும் .
சோறு போடும் சாமி என்று
கடலை நினைக்கிறான் - சென்றால்
மாறி மாறி பூச்சி போல
செத்து வீழ்கிறான் - பின்பு
யாரு போடும் திட்டமென்று
அறிய பார்க்கிறான்-அவன்
அறியாமல் கடைசியிலே
மாண்டு போகிறான்...
வந்த மறம் மறக்கவில்லை
இந்த நிலை மாற்றி வைக்க
வாளெடுக்கத் தயார்தான்
வாழ்க்கைமுறை தோதில்லை..
நிர்வாணப் படம்வந்தால்
நிமிடத்தில் பரவி விடும்
நிலைகுலைக்கும் உன்மரணம்
யாருக்கும் தெரியவில்லை
தெரிந்தாலும் பெரிதாக
புரிந்திட போவதில்லை ..
மொத்தத்தில்
உன் மரணம் எனக்கு
வலிதரும் நிகழ்வெனில்- இந்த
நாய்மேய்க்கும் நகரத்தார்க்கோ
4 நிமிட நியூஸ்.
ஆட்சி கட்டிலுக்கு அடியேனின் வேண்டுகோள் :
பட்டென கேட்டிடு.
பாடு பட்டும்
சட்டென தருவோம்..
மொத்தமாய் பெற்றுக்கொண்டு
சத்தமேதும் போடாமல்
மீனவன் படுகின்ற
மீலாது துயரினின்று
மீண்டுமொரு சுதந்திரம்
மீட்டுத் தந்திடு
உண்மையில் சுதந்திரம்
உருவான நாளென்று
உறக்கச் சொல்லிடுவோம் -இது
ஒன்றெனுஞ் செய்திடு-வழக்கம்போல்
ஒட்டு வங்கி பெற்றிடு .. ..
என் தாத்தன்,
என் அப்பன்,
என் அண்ணன்
எல்லோரும் இழந்தனர்
இன்னுயிர் நட்புகளை இலங்கை பிரச்சனையால்
இன்று நான்.
என் தலை முறையோடு
இத்துயர் ஒழியட்டும்
உன் உயிர் ஒன்றே
இறுதியாய் போகட்டும்
இத்துப்போன பழங்கதையால்
செத்துப்போன நண்பனை எண்ணி
கத்திக் கத்தி தொண்டத் தண்ணி
வத்திப்போச்சு பாத்தீரா ?
கண்டத்தில் பாஞ்ச குண்டு
தொண்டைக்குழி துளைக்கையிலே
துள்ளத் துடிக்க அவன்
துடிச்ச துடி புரியலையா ??
அரக்கன் மனங் கூட
அரைநொடியாவது யோசிக்குமே
அந்த நொடி சுடும்போது
அறிவுகெட்ட உன் மூள
எந்த ஒன்னுஞ் சொல்லலியா?- நீ
மனுஷன் என்பது நினைவில்லயா?
![]() |
Pritjo- who died (07.03.2017) yesterday .. Who was killed By srilankan navy |
பாவிகள் தம் படைமடம் காட்ட
பாலகன் இவன கொன்னீரோ ?
சதியோ ? விதியோ ? யார்செய்த பிழையோ?
மிச்சம் மீனவன் கண்ணீரோ?
பட்டதும் போதும்
கெட்டதும் போதும்....
பார்த்துச் சகித்து விட்டதும் போதும்..
சில்லறைப் புத்திச் சிங்கள அரசே
சின்னஞ் சிறுவரை சுட்டதும் போதும் .
சோறு போடும் சாமி என்று
கடலை நினைக்கிறான் - சென்றால்
மாறி மாறி பூச்சி போல
செத்து வீழ்கிறான் - பின்பு
யாரு போடும் திட்டமென்று
அறிய பார்க்கிறான்-அவன்
அறியாமல் கடைசியிலே
மாண்டு போகிறான்...
வந்த மறம் மறக்கவில்லை
இந்த நிலை மாற்றி வைக்க
வாளெடுக்கத் தயார்தான்
வாழ்க்கைமுறை தோதில்லை..
நிர்வாணப் படம்வந்தால்
நிமிடத்தில் பரவி விடும்
நிலைகுலைக்கும் உன்மரணம்
யாருக்கும் தெரியவில்லை
தெரிந்தாலும் பெரிதாக
புரிந்திட போவதில்லை ..
மொத்தத்தில்
உன் மரணம் எனக்கு
வலிதரும் நிகழ்வெனில்- இந்த
நாய்மேய்க்கும் நகரத்தார்க்கோ
4 நிமிட நியூஸ்.
ஆட்சி கட்டிலுக்கு அடியேனின் வேண்டுகோள் :
பட்டென கேட்டிடு.
பாடு பட்டும்
சட்டென தருவோம்..
மொத்தமாய் பெற்றுக்கொண்டு
சத்தமேதும் போடாமல்
மீனவன் படுகின்ற
மீலாது துயரினின்று
மீண்டுமொரு சுதந்திரம்
மீட்டுத் தந்திடு
உண்மையில் சுதந்திரம்
உருவான நாளென்று
உறக்கச் சொல்லிடுவோம் -இது
ஒன்றெனுஞ் செய்திடு-வழக்கம்போல்
ஒட்டு வங்கி பெற்றிடு .. ..
என் தாத்தன்,
என் அப்பன்,
என் அண்ணன்
எல்லோரும் இழந்தனர்
இன்னுயிர் நட்புகளை இலங்கை பிரச்சனையால்
இன்று நான்.
என் தலை முறையோடு
இத்துயர் ஒழியட்டும்
உன் உயிர் ஒன்றே
இறுதியாய் போகட்டும்
என்றும் அன்புடன்
உங்கள்
முகவை மு பிரசாந்த்
(இராமேஸ்வரம் )
கருத்துகள்
கருத்துரையிடுக