வித்யாசமான தலைப்புகளை பார்க்கும்பொழுது வருகிற சிரிப்பை விட அலாதியான சுவாரஸ்யம் அப்படி ஒரு தலைப்பை நேரடியாக நாமே சந்திப்பதில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக "போங்கடி நீங்களும் ", "மொசரக்கட்டை","விரலா? வீக்கமா?" போன்ற தலைப்புகள் அந்த அனுபவத்தை ஏற்கனவே தந்தவை. அதே போன்ற தலைப்புதான் இதுவும் கூட.எதோ தூக்க கலக்கத்தில் 3 மணிக்கு எழுந்து கேட்கிற கேள்வியை தலைப்பாகவே தந்து விளையாடிய ஆவடி எழில் இலக்கிய பேரவைக்கு நன்றி. 13.08.17 அன்று ஆவை எழில் இலக்கிய பேரவை நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை. தலைப்பு:விடிந்ததா?விடியலயா? கேள்விகளை ஆகூதியாக்கி விடைகளை பிராப்தம் பெற வேள்வி நடத்தும் பேரவையே ! வெடிவைத்து தகர்த்தாலும் வெட்டுறாத பாறை-சிறு தட்டுளிக்கு கட்டுப் படும் (அன்றேல்) பசுமரத்து வேரோடி பலமான பாறைகூட பாதியாக வெட்டுப் படும். மரத்துக்கும் தோல்வி மலைக்கும் தோல்வி விடியல் யாருக்கு...... .? தானாக உடைந்ததை த...