கவிதாஞ்சலி (கவிக்கோ)

மறைந்த ஐயா கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்காக கவிதை சிறகுகள் அமைப்பு நடத்திய கவிதாஞ்சலி கவிதை...

மதம் கடந்து மனித பண்புகளோடு மல்லாந்த முகத்தோடு அனைவரையும் எதிர்கொள்ளும் பண்பாளர்.சிறந்த இலக்கிய வாதி ..ஆகச்சிறந்த கவிஞர்,பேச்சாளர்,எழுத்தாளர்,சிந்தனையாளர்,.. மொத்தத்தில் தமிழக இலக்கிய உலகில் முத்திரை பதித்து இருக்கக்கூடிய இலக்கிய ஆளுமை...என்போன்ற ரசிகர்களுக்கும் சரி, நல்ல ரசிகர்களுக்கும் சரி, இவர் படைப்புகள் தீனி போட்டு திருப்திப்படுத்தும் என்பதில் ஐயமில்லை ....
    

#  கவிதாஞ்சலி 

பால்வீதி பார்க்க சென்ற
     படைப்பாளி ஒருவருக்கு,
கடவுளை காணச்சென்ற-என்  
     கவிதை கடவுளுக்கு 
காதலாகி கசிந்துருகி 
     கண்ணீர் மல்க கவிதாஞ்சலி 

தவிக்கும் மனதுக்கு 
   தாய்தமிழல் மருந்திட்டு 
செவிக்கோர் விருந்தாக 
   தீந்தமிழை தந்தளிக்கும்  
புவிக்கோர் நாயகன் என் 
    கவிக்கோவின்  காலடியில் 
கண்ணீரை சேர்த்தவாறு 
    காலம் கடத்த நான் 
கற்றுக்கொண்   டிருக்கிறேன் 



சொல்லும் சொல்லில் 
 வெல்லும் சொல்லை 
சொல்லிச் சொல்லி 
  வெல்லும் கலையால் 
துள்ளும் மனதை  
  அல்ல அணைக்கிற 
துள்ளல் மொழியும் இவர் கவியே 

எள்ளல் பேச்சால் 
      காயம் பட்டு மனம் 
அல்லல் பட்டு 
    அழுகின்ற வேலை 
கவிதை வரியால்  
    கண்ணீர் துடைக்கும் 
காகித தாயும் இவர் கவியே 


படைப்புக்களை பார்த்தமட்டில் 
      பார்மேவும் போர்மாளும் 
பல லட்சம் தூதரிலே 
      ஒரு தூதர் இவர் போலும் ..

அப்துல்கள் இறப்பாலே 
    அழுதழுது மனமிங்கு 
ஆற்றாது தவிக்கிறதே 
    தேற்றிட ஆளில்லையே ...

வல்லரசு இந்தியாவை 
   வரவழைக்க எண்ணி எண்ணி 
வாழ்வனைத்தும் அர்ப்பணித்த
    அப்துல் அன்று .

வாணியம்பாடி கார நல்ல 
    வார்தைகளை கூட்டுவித்து 
வரலாறு படைத்துவிட்ட 
    அப்துல் இன்று ..


கருப்புமலர் முதலாக 
     பால்வீதி வரையாக 
கவியாளர் பலபேரை 
     காவுபெற்ற இந்தாண்டில் 

ஐயா நீர் பிணமாக 
அடிமனது ரணமாக  
யாராலும் என்மனநோய்  
மாறாது குணமாக .

வாழத்தகா மனிதரெல்லாம் 
   வளமுடனே வாழுகையில் 
வார்த்தைகளின் வள்ளலே-உன் 
   வாழ்நாள் நீட்ட நான் - என்ன செய்ய 
தொட்டு வைத்த காவியத்தை 
   விட்டு விட்டு போனாயே 
கட்டவிழ்த்த உயிர்க்கூட்டி நீ 
   காவியம் முடிக்க நான் -என்ன செய்ய  

காதலித்த வார்த்தைகட்கு 
   கல்யாணம் செய்துவைத்து 
கவித்தெடுத்து உலகெல்லாம் 
   கவிரசிகர் மனம்பிடித்து 
காலத்தால் அழியாத 
    கவிக்கோ ஓர் களவாணி 

கவியது பாடி 
மதியது மயக்கி 
மனமதை களவாடும் 
நூதன களவாணி- இந்த 

களவாணி காலமான 
   கனத்த செய்தி  கேட்ட நொடி 
கல்லும் கரைபுரள  
   கடலையையும் கொதிக்குதடி  
மீண்டிங்கு இவர் வந்து 
   பல்லாண்டு தமிழ் எழுத 
பாழான மனம் வேண்டி 
   பாடாய் படுகுதடி...

நீர் திரும்பி பூமி வந்து 
நீங்காத கவிதை தந்து 
நீண்டகாலம் தமிழ் எழுத,

தவமொன்று செய்து நான் 
வரமொன்று கேட்பேன்...

ஆனால்  

வரங்களே  இங்கு சாபங்கள் ஆனால் தவங்கள் எதற்காக ?????

என்றும் அன்புடன்
           உங்கள்

பாம்பன்மு பிரசாந்த்
7299585174

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்