இயற்கை ( காடு - மாத இதழுக்காக )

    ............     இயற்கை  - காடு   .............

எழிலென்றும்
பொழிலென்றும்
எல்லோரும் பாராட்டும்
அழகொன்றே
இயற்கையெனில்
அதுவும் தவறு.

முகில்தூவி முல்லைக்கு
முகம்கழுவும் அழகியலை
முழுதாக மறுத்தாலும்
அதுவும் தவறு.

அகடும் முகடும்
மலையும் சரிவும்
கல்லும் மண்ணும் இயற்கையடா..

அழகும் அய்வும்
ஆதியும் அந்தமும்
அதுவும் இதுவும் இயற்கையடா..

மண்ணில் பிறந்தவன்
மண்ணோடு போகும்
மனிதச் சுழற்சியும் இயற்கையடா

ஏரியும் இறங்கியும்
எங்கும் உறங்கியும்
திரிகிற வாழ்வும் இயற்கையடா.
.
.
பஞ்ச பூதங்கள்
பாயொன்று போட
படுக்கைலயிலாடும் பாரதமே..
.
.

நெடுக்குங் குறுக்குமாய்
நின்மேலோடும்
ஆற்றுரேகைகள் அதுவியற்கை.

காற்றும் வந்து
கைகள் நீட்டி
தேற்றும் தென்றல் அதுவியற்கை

சேற்றுக்குள்ளே
சிரித்துஆடும்
சின்னதவளை அது இயற்கை.

சோற்றுக்காக
சோறுமறக்கும்
சொப்பன உழவன் கனவியற்கை.

கம்பன் காட்டிய கழனிவளம்
இளங்கோ காட்டும் இந்திரவிழா
இலக்கியம் காட்டும்
பெருவனப் பெல்லாம்
இயற்கை காட்டும் பொதுவனப்பே...

சப்தங்கள் பிறந்ததும்
சந்தங்கள் பிறந்ததும்
இயற்கை அளித்த காட்டினிலே.

இத்தகு பெருமை
இயற்கை எழிலை
எப்படி சொல்வேன் பாட்டினிலே..     

                  என்றும் அன்புடன்
                பாம்பன். மு.பிரசாந்த்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்