புதியன விரும்பு

                        புதியன விரும்பு

          “பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது நன்னூல் விதி . இந்த விதியின் பொருளாக  அனைவரும் எண்ணுவது பழையவைகள் அழிக்கப்பட்டு புதியவைகள் வரவேண்டும் என்பதாம். ஆதிகாலந் தொட்டே தமிழர் மரபு என்தாவ்ன்றையும் அழித்து புதுமை படைக்க சொன்னதே கிடையாது.. என்னடா இது? ஏதோ பழைய புராணம் பாடத் தொடங்குகிறானே என்று என்ன வேண்டாம். உண்மையில்  பழமையும் புராணமும் அவ்வளவு சலிப்பு தருபவை  ஒன்றும் அல்ல. 

      வெகு நாட்களாகவே எனக்கு பாரதியின் ஆத்திசூடி வரிகளை தலைப்பாக்கி கட்டுரை எழுத வேண்டும் என்கிற  ஆசையொன்று உள்நெஞ்சை அரித்துக்கொண்டே இருந்தது. அந்த  வகையில்  ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரைக்கு நீங்கள் தந்த ஆதரவை எண்ணி பாரதிக்கு நன்றிகளை காணிக்கையாக்கி கொள்கிறேன்.  தொடர்ந்து இதேபோல்  உங்கள் பேராதரவையும் மேலான கருத்துகளையும் அளிக்க வேண்டுகிறேன்.

      இன்றைய நம் தலைப்பு புதியன விரும்பு என்கிற பாரதியின் மற்றுமொரு ஆத்திசூடி வரி.  உண்மையில் இது எனக்கு நெருக்கமான மற்றும் எல்லாவற்றுக்கும் மேலான வரி..ஏன் இதை இப்படி சொல்கிறேன் என்பதற்கு ஓர் சுவாரஸ்யமான கதை உள்ளது. அனால் அது எனக்கு சுவாரஸ்யம்தான் உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.இருந்தாலும் சுருக்கமாக சொல்லல முயலுகிறேன்.

      சிறுவயது முதலே சமூகத்தின் பெரியவர்களை சந்திக்கும்  வாய்ப்பு  கிடைத்தால் அவர்களிடம் கையெழுத்து வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.அப்படி ஒருமுறை எங்கள் ஊருக்கு மேனாள் குடியரசு தலைவர் மேதகு ஐயா ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் வந்திருந்தார். மாணவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திரும்தார்கள். பள்ளிக்கு இரண்டு பேர் வீதம் கேள்விகள் கேட்க தேர்வு செய்யபட்டார்கள். எந்த ஜென்மத்து புன்னியமோ தெரியவில்லை அதில் நானும் ஒருவன். அதன் பிறகு அங்கு நடந்ததெல்லாம் இத்யாதி இத்யாதி....இத்யதிகளெல்லாம் மயுடிந்த்பிர்பாடு அவரிடம் கையெழுத்து வாங்க நாட்குறிப்பை நீட்டியபோது கூட்டத்தில் நோட்டு திரும்ப வந்தால் போதும் என்கிற அளவுக்கு மாணவ நண்பர்கள் சூழ்ந்து கொண்டார்கள். ஒருவழியாய் என் கைக்கு என் நாட்குறிப்பு வந்தது .என்ன ஒரு மகிழ்ச்சி தெரியுமா? என் நாட்குறிப்பில் அவரது பேனா மையால் அவரது கையெழுத்து...எல்லையிலா மகிழ்ச்சி....இப்பொது நினைத்தாலும் இமாலய வெற்றி போல்தான்..அதில் எல்லோர்க்கும் ஒவ்வொரு வாசகம் எழுதி கையெழுத்து இட்டிருந்தார்.  நண்பன் ஒருவனுக்கு "உள்ளத் தனைய துயர்வு " என்று எழுதி அதில்  கையெழுத்து..இப்படியாக ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொன்று. எனக்கு இதோ இன்று தலைப்பாக நிற்கும் "புதியன விரும்பு".

இப்பொது சொல்லுங்கள் . எல்லாவற்றையும் விட எனக்கு இந்த வரிகள் மேலானவை தானே.?

              நம் எட்டயபுரத்து புரட்சியாளன் பாரதி சொன்ன அறிவுரைகளாம் புதிய ஆத்திசூடியின் அறிவுரைகளின் மொத்த கரு என்னவென்றால் மனிதன் பழைய நிலைமாற்றி புதியதோர் மனிதனாக மாறி சமுதாய அக்கறையுடன் கூடிய வல்லவனாக திகழ வேண்டும் என்பதாகவே இருக்கிறது].. அதை வலியுறுத்த தான் இத்தனை பாடும் பாரதி பட்டன் என்பதுன் அனுமானம்.
         
         புதியன விரும்பு என்பதை வெறும் வாய் வார்த்தையாக சொல்லிவிட்டு போனவனல்ல பாரதி. அதுபோல வாழ்ந்து கட்டியவன் . பலரின் கேலிக்கு மத்தியிலே புதுகவிதை என்கிற பெருவரத்தை தற்கால இலக்கிய உலகிற்கு அருளி செய்தான். யாப்பரியா புலவனென்று பிறர் சொன்ன போதும்கூட, இலக்கண விதிகளுக்கு உட்பட்டு கருத்தை சிதைப்பது என்கிற பழைமையை மாற்றி கவிதை உலகிற்கு புது இலக்கணம் படைத்து தந்தான். ஆனாலும்  புதியன விரும்பிட விளைந்தானே ஒழிய பழைமையை பழித்தானில்லை 
         
பழைமை என்பதற்கும் புதுமை என்பதற்கும் சரியான விளக்கத்தை பாரதி சொல்லாமலில்லை 

பழைமை என்பவை புதியவைகளை தருவிப்பவை

புதுமை என்பவை பழமையை வருவிப்பவை. 

            எப்படியென்றால் ஒரு புதுமை வருகிற போது பழைய செயலொன்றை புதிய விதமாக  செய்யத்தான் வருகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஒரு செயலை வேறுவிதமாக செய்து முடிக்கும் திறன் பெற்றதாய் உள்ளது. அது செய்யவிருக்கும் செயல் ஒன்றே. ஆனால் செய்யப்போகும் விதம்தான் வேறு.அதேபோல ஒரு பழமையை எடுத்துகொள்வோம். புதுமை தருகிற பயனை காட்டிலும் சிறந்த முறையில் அதே பயனை தரவல்லதாக உள்ளது என்பது உண்மை.இதில் மற்றுமொருவேடிக்கையான சிறப்பு என்னவென்றால், என்னதான் புதுமைக்கு ஏற்றதாக நம் வாழ்கை முறை பழகி விட்டாலும் பழமை தருகிற பயனைத்தான் மனம் விரும்புகிறது. இந்த உளவியல் ரீதியான விருப்பத்தை புரிந்துகொண்டிருந்ததால் தன பாரதி புதுமை உண்டாக்கு என்றோ, புதுமை படை என்றோ, புதியன செய் என்றோ சொல்லாமல் புதியன விரும்பு என்றிருக்கிறான்.

புதுமை என்றாலே பழமையை புறக்கணிப்பது என்றும்,புதுமை என்றாலே பழமையை ஏற்காமல் இருப்பது என்றும் தவறான கணிப்பும் கண்ணோட்டமும் இன்றைய சமுதாயத்தில் இருந்து வருவது உண்மை. புதுமை என்பது பழமைக்கு பழமையாய் புதுமைக்கு புதுமையுமாய் விளங்குவது. அப்படி விளங்கும் ஒன்றே இன்றைய நவநாகரீக உலகத்தில் தன்னை நிலைநிறுத்தி கொண்டு,இந்த உலகமயமாக்கலுக்கு தாக்குபிடித்து நிற்பவைகளாக இருக்க முடியும்.உலகத்தோர் பார்வையில் பாரதம் உயர்ந்து விளங்குவதற்கு, இனி வரவிருக்கும் புதுமைகள் நம் பழமையான தொன்மை சிறப்பை குலைத்து விடுவதாய் இல்லாமல் அதே சமயம் நம் தொன்மையை பிறருக்கு பறைசாற்றும் வகையினதாய் நவீனம் கலந்து உலக நாடுகளின் பார்வையில் புதியதோர் தனி பாணியை பாரதத்துக்கென படைத்துவிடுவனவாய் இருக்க வேண்டும்.அதுதான் ஒரு புதியன விரும்பியின் பாணியும் கூட.

Bharathiyar An Epic Poet who broked all the idiotic ropes


சரி..இந்த விடயம் பாரதிக்கு தெரிந்தால் உன்னை என்ன செய்வான் தெரியுமா? என்கிற உங்கள் மானசீகமான கேள்வி புரிகிறது.
பாரதி இதை அறிந்தால் மகிழ்ந்து போவான்.உண்மையில் இத நீங்கள் படித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாரதியின் ஆன்மா நிச்சயம் நெகிழ்ந்து கொண்டிருக்கும்..

நான் நினைத்ததை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு இந்த இந்த கிறுக்கனின் எழுத்தும் ஒரு கருவியாய் அமைகிறதே என்றும் அதை நீங்கள் வாசிப்பதை கண்டும். 

அப்படியெல்லாம் இருக்காது நீயாக புதிது புதிதாக எதையாவது சொல்லாதே என்கிறீர்களா.. சரி இருக்கட்டும் இதுவும் புதுமை தானே. (#புதியன_விரும்பு). 

ஆனால் ஒன்று நிச்சயம் . பாரதியை போன்றதோர் புதுமையை  பின்பற்றும் ஒருவன் மட்டுமே சமுகத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் விளங்க முடியும். 

 பாரதி பழமை கூறும் அனைத்தையும் அப்படியே ஏற்காமல் புதுமை புகுத்தி உலகத்திர்கேற்ப வழங்கினான், அதுபோலவே அதனை அடியொற்றி நாமும், நடந்துகொண்டிருக்கும் உலகமயமக்கலாலும் (glovbalization) நவநாகரிகமென்ற போர்வைக்குள் புகுந்து புதுமைக்கு புதுஅர்த்தம் பண்ணிக்கொண்டு மடைமாற்றம்  அடைந்துவிடாமல் , இன்று மாற்றமென்ற பேரில் மதியிழந்து திரியும் கூட்டத்தை மாற்றி நல்வழியில் இட்டுச்செல்வதாக நம் புதுமை  அமைய  வேண்டும்


புதுமாற்றம் மாற்றமென்று
புத்திகெட்ட கூட்டமொன்று
புவிமிசையே வாழு தவர்    
புதியன விரும்பிகள் அல்ல
பொழுது போக்கு விரும்பிகள்
                                                   
                                                                      -நெய்தலான்

அப்படியாகிய பொழுது போக்கு விரும்பிகளாக அல்லாமல் புதியன விரும்பிகளாய் புவிமேல் வளம் வருவோமாக.

அடுத்தடுத்த பதிவுகளை யுடனே பெற இணைந்து கொள்ளுங்கள்.
Enter your email address:

என்றும் அன்புடன்
உங்கள்
பாம்பன்.மு.பிரசாந்த்
 7299585174
pambanmuprasanth@gmail.com


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

என்னை கவர்ந்த குறள்