இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னை கவர்ந்த குறள்

படம்
இலக்கிய வளமை எவ்வளவாயினும், உலகளாவிய வெற்றிபெற அம்மொழி விஞ்ஞான மொழியாயும் இருத்தல் அவசியம். என்னைக் கவர்ந்த திருக்குறள் என்கிறபடிக்கு எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்த குறள் இதுதான்.  எல்லோர்க்கும் நல்ல அறிமுகமுள்ள ஓர் நல்ல அறிவுரை. ஆனால் அது அறிவுரை என்கிற கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஓர் அறிவியல் கிளி. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது என்றோ மறப்பது நன்று. என்ன இது.. குறளையும் பொருளையும் குளறுபடி செய்கிறாயே என்கிறீர்களா?.கொதிக்க வேண்டாம். உண்மையில் இந்தக் குறள் இப்படி இருந்திருந்தாலும் நாம் போற்றித்தான் இருந்திருப்போம். இன்னும் ஒருபடி மேலேபோய், ஒரு சராசரி மனிதன் எப்படி தனக்கு நடந்த நன்றல்லதான ஒன்றை உடனே மறக்க முடியும்.அந்த உளவியலை நன்குணர்ந்தே வள்ளுவர் என்றோ ஒருநாள் அதை மறந்துவிடுவது நன்று என்றிருக்கிறார் என்று உரைகளும் வேறு சொல்லியிருப்போம். ஆனால்..... அன்றே மறப்பது நன் று என்றான். ஏன் தெரியுமா? மனித மூளை ஒவ்வொரு இரவும் உறங்குகிற போது அன்றைய நாளின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் பிரித்து முக்கியமானவை, முக்கியமற்றவை என்பதற்கேற்ப தற்காலிக மற்றும் நிரந...

சலக் எருது ஜல்லிக்கட்டு

இந்த ஜல்லிகட்டை தெரியுமா? சலக் எருது ஜல்லிக்கட்டு. பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால் திருமா மெய் தீண்டலர்.                                                                     கலித்தொகை ஜல்லிக்கட்டு..இதை அறியாதவர்கள் உலகளவில் இன்று எவரும் இல்லை என்பது பட்டவர்த்தனமான உண்மை. ஆனால் விதவிதமா ஜல்லிக்கட்டுகள் உண்டென்பதையும் கேள்விப்பட்டிருக்கும் நாம் அவைகளை அறிந்துகொள்ள துளியும் முற்பட்டதில்லை என்பதும் அதே அளவுக்கு உண்மை. அப்படி பலரால் மறக்கப்பட ஒரு ஜல்லிக்கட்டுதான் இந்த சலக் எருது ஜல்லிக்கட்டு. கிட்டத்தட்ட காளைக்கும் காளையர்க்கும் இடையான ஒரு பலப்பரீட்சை தான் இந்த சலக் எருது. காலமாற்றத்தால் இழந்...

வழிச்செலவா?வழிப்பறியா?

படம்
வழிச்செலவா?வழிப்பறியா? யானை விலை குதிரை விலை சொல்வது என்றெல்லாம் கேள்விபட்டிருக்கிறோம் அதற்கு எடுத்துக்காட்டு சொல்வதானால் இன்றைய குழந்தைகட்கு பயணவழி உணவகங்களை காட்டித்தான் சொல்லவேண்டும். அப்படி பணம்பிடுங்கும் ஆலைகளாக மாறிவிட்டிருக்கின்றன அவை.  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பது பெரியோர் வாக்கு. ஆனால் இன்றோ உண்டி கொடுத்து உயிரெடுக்கிறாரே என்கிற அளவுக்கு உணவகங்கள் மாறிவிட்டன. கடந்து வந்த காலமாற்றத்துக்கும் நடந்து கொண்டிருக்கும் நடப்புலகின் வேகத்திற்கும் ஈடு கொடுப்பதாய் எண்ணிக்கொண்டு நாமும் வாழ்க்கைமுறையை முற்றிலுமாய் துரிதப்படுத்திகொண்டே இருக்கிறோம். அப்போதெல்லாம் வெளியூர் பயணம் என்றால் வழிச்செலவுக்கென்று ஒரு குறிப்பிட்டதொகையை ஒதுக்கி திட்டமிடுவோம். அதற்குள் இந்த நொறுக்குத்தீனிகள், ஆட்டோ செலவு, பயணதொகை, உணவுசெலவு உள்ளிட்ட பலவும் அடங்கிவிடும். ஆனால் இப்போதெல்லாம் திட்டமிடவும் முடிவதில்லை. திட்டமிட்டாலும் திட்டமிட்ட தொகைக்குள் செலவுகள் அடங்குவதுமில்லை. வழிச்செலவுகளுள் ஒன்றான உணவக செலவே இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் உடைத்தெறிந்து விடுகிறது. காரணம் பயணவழி உ...

என்னை நானே தைத்துகொள்கிறேன் - இப்படிக்கு துணி

படம்
என்னை நானே தைத்துகொள்கிறேன் இப்படிக்கு துணி துணிகளெல்லாம் தன்னை தானே தைத்து கொண்டு விட்டால் ,ஆடை உலகம் எப்படி இருக்கும்?.அன்றுதொட்டு இன்றுவரை அதிசயங்களை நிகழ்த்திக்காட்டி மனித சமுதாயத்தை மாறி மாறி குழப்புவதிலும் பிரம்மிக்க வைப்பதிலும் அறிவியலும் ஆண்டவனும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவே தெரிகிறது.விஞ்ஞான அறிவும் வித்தியாசமான தேவைகளும் இணைகிற வேளையில் வியப்பூட்டும் புதுமை ஒன்று நடந்தேறும்.அப்படி பத்தோடு பதினொன்றாக வந்து சேர்ந்த கடைசி புதுமை ஒன்றுதான் “தானே தைத்து கொள்ளும்” துணிகள். தானே தன்னை சீரமைத்து கொள்ளும் துணிகள் பற்றி ஏற்கனவே ஆராய்சிகள் பல நடந்திருந் போதும்கூட ஆடை உலகில் இது ஒரு புரட்சி தான் என்பதில் ஐயமில்லை.உண்மையில் இந்த தொழில்நுட்பம் வரவேற்கவேண்டியதும் ரசிக்கதக்கதும் ஆகும். ஆடைகளில் சிராய்ப்புகள் , கிழிசல்கள் இருப்பது ஒன்றும் அரிதல்ல. உண்மையில் அது பெரும்பலானோர்க்கு ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் உயிரியல் துறை ,வேதியியல் துறை ,வாயுக்கசிவு ஏற்படும் இடங்கள் மற்றும் கதிர்வீச்சு உள்ளிட்ட துறைகளில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பு உடைகள் (Hazmat Suits)என்றளவில் அவற்றில...

தாய்மொழியும் கையெழுத்தும்

மொழி வெறும் மொழியாக மட்டும் பார்க்கப்படும் தேசத்தில், இருப்பதைக்காட்டிலும் அழிந்து போவது அந்த மொழிக்கு நல்லது என்றே தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு கவிதை நாவலில் க...

வரட்டும் மழை

முகத்தில் துப்பட்டா கட்டாத முச்சந்தி முல்லைக்கு முகம்கழுவ, பொத்துக்கொண்டு கொட்டி புளியங்காய்களுக்கு போட்டிபோட்டுப் பொட்டு வைக்க, வேண்டுமென்றே அவனுக்கு அவள் ...

மழை வரட்டும்

முகத்தில் துப்பட்டா கட்டாத முச்சந்தி முல்லைக்கு முகம்கழுவ, பொத்துக்கொண்டு கொட்டி புளியங்காய்களுக்கு போட்டிபோட்டுப் பொட்டு வைக்க, வேண்டுமென்றே அவனுக்கு அவள் ...

How to do online

It is an excellent online service introduced by GOI. Kindly, pass this on to as many as you can.   Finally something very useful...     INDIAN   GOVERNMENT     INTRODUCED   ONLINE Services  Obtain:    1. Birth Certificate      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1     . 2. Caste Certificate      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4     . 3. Tribe Certificate      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8     . 4. Domicile Certificate      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5     . 5. Driving Licence      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6     . 6. Marriage Certificate      http://www.india...