ஹே ராம் சொல்லிவிட்டுத்தான் இறந்தாரா காந்தி?

1948 , ஜனவரி 30. மகாத்மா காந்தி நாத்துராம் விநாயக் கோட்சே வால் சுட்டுக்கொலை செய்யபட்டார். இறக்கும் போது கடைசியாக அவர் சொன்ன வார்த்தை  “ஹே ராம்” என்பதுதான்.

நிஜமாகவே அப்படி சொல்லிவிட்டுத்தான் இறந்தாரா? என்பதில் இதுவரை ஆயிரம் சந்தேகங்கள்,ஆயிரம் கேள்விகள். ஆனால் விடை கிடைத்தபாடில்லை.

காந்தியை தீவிரமான இந்து என்று காட்டுவதற்காக மட்டுமே அவர் ஹே ராம் என்றபடி இறந்தார் என்று தெரிவிக்கிறார்கள். காந்தியின் இறந்தவாயில் ராம் என்கிற சொல்லை திணித்துவிட்டார்கள்.
இது காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வெளிவந்த கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே ஒரு பேட்டியில் தெரிவித்தது.

அப்படியென்றால் இறக்கும்போது ஹே ராம் என்று காந்தி சொல்லவில்லையா?

இல்லை. அவர் சொல்லவே இல்லை. அது ஒரு தானியங்கி துப்பாக்கி.அதன் மேகசினில் 9 குண்டுகள் வைக்கலாம்.ஆனால் அந்த நேரம் 7 தான் இருந்தது. ஒருமுறை சுட்டால் அடுத்த நொடிப்பொழுதில் 7 குண்டுகளும் வெடித்துவிடும். அப்படி பாயும் குண்டுகள் முக்கியமான பகுதிகளை ( இதயம்,மூளை, மார்புப்பகுதி ) துளைத்துச்செல்லும் பொழுது முதலில் சுயநினைவை முற்றிலுமாக இழப்பீர்கள்.சக்தி இருக்காது.

அன்று காலை  காந்தியை கண்டதும், மறைத்து வைத்திருந்த தன் துப்பாக்கியை தயாராக வைத்துக்கொண்டான் கோட்சே. காந்திக்கு அருகில் இருந்த பெண்ணை காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அவளை தள்ளிவிட்டு விட்டு காந்தியை சுட்டான் கோட்சே. எல்லாம் ஒருநொடிக்குள் நடந்துவிட்டது.

1982ம் ஆண்டு காந்தியின் வாழ்க்கையை சித்தரிக்கும் முழுநீளத்திரைப்படம் ஒன்றை தயாரித்து இயக்கியிருந்தார் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. இதில் காந்தி இறக்கும்போது ஹே ராம் என்று சொல்லிவிட்டுத்தான் இறப்பார்.

இது குறித்து சொல்லும்போதும்  “அதை காந்தி சொல்லவில்லை. காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி சொல்லியிருக்கிறார்.” என்கிறார் கோபால் கோட்சே.

அபிமானிகள் என்பதற்காகவும் சரி, எதிர் கொள்கை என்பதானாலும் சரி, உண்மை மறையலாமே தவிர ஒருபோதும் மாறப்போவதில்லை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்