சாவு


.......கெட்ட  சாவு .....

விழுந்த  இடத்தில் 
   எழுந்து பார்த்தேன்.
சரிந்து கிடந்த தென் சரீரம்.

சாவது எவர்க்கும்
  ஆவது உறுதி -அதை 
அறியாதிருந்த தென் அறிவீனம்.

உடலின் பலம் மேல் 
உள்ள நம் பிக்கையால் 
உதறித் தள்ளினேன் உறவுகளை 

இன்று ஊரே நிற்கிறது
ஒருவரும் அழவில்லை
உற்சாகம் தெரிகிறது-என் 
உயிர் போன தாலோ ? 

ஊரும் இல்லை உறவும் இல்லை 
உனக்காக வருந்த ஒருவரும் இல்லை 
வாழும் வரையில் அதிகாரம் 
செய்தது எல்லாம் வீணாகும்.

உன்னை எண்ணி ஒருவன் வருந்த 
உலகில் உன் சாவு உயர்ந்த தாகும்.
அன்றேல் 
நுந்தம் பிறப்பென்பதே 
நுங்கின் இடைப்பட்ட கசடாகும்.

நல்ல வாழ்க்கை வாழ எண்ணி 
நாளும் எங்கும் மனிதனே 
நல்ல சாவு கிடைக்க கொஞ்சம் 
நல்ல உள்ளம் கொள்ளுவோம்   

என்றும் அன்புடன் \
      உங்கள் 
முகவை மு பிரசாந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்