கேடி மனம் ( #நேரம் தவறாமை )
நேரம் தவறாமை பெயரிலேயே ஆமை இருக்கிறதே.பிறகெப்படி வேகம் எதிர்பார்ப்பது.முதலில் பெயர் மாற்ற வேண்டும். நேரம் தவறா முயல் என்று.பொதுவாக குறித்த இடத்திற்கு குறித்த நேரத்திற்கு வரும் மனிதர்களை பாராட்ட வேண்டியதில்லை.அதுதான் இயல்பாக இருக்க வேண்டிய பண்பு..ஆனால் இப்போதெல்லாம் பாராட்டும் போதே இவர் குறித்த நேரத்திற்கு வரும் பழக்கம் கொண்டவர் என்றும் கூட சேர்த்து பாரட்டுவதை நேரடியாகவே காண முடிகிறது.. சரி..எப்போது இந்த பழக்கம் தொடங்கியது...ஒரு ஆய்வு செய்து பார்ப்போமா ? . என் எண்ணம் என்ன என்று சொல்லுகிறேன்.எழுத்து வழியாக ஏதோ சொல்ல வேண்டும் என்பதைற்காக இல்லாமல் எல்லோற்கும் எளிமையாக புரியும்வண்ணம் அமைய வேண்டும் என்பதால் இப்படி செல்கிறேன்.ஒருவேளை உங்களுக்கு ஒத்து வந்தால் ஏற்றுகொள்ளுங்கள் அன்றேல் நேரம் தவறா முயலாக உங்கள் அடுத்த வேலையை செய்ய கிளம்பி விடுங்கள்...சரி சிந்திக்க தொடங்கலாமா....உலக மக்கள் எல்லோரும் சரியான நேரத்தில் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்க. அப்போது ஒரு விழாவிற்கு பெரிய மனிதர் ஒருவரை அழைத்திருந்திருப்பார்கள் எதோ உண்மையான காரணம் ஒன்று இருக்க,அவர் தாமதமாக வந்திருப...