மது செய்யும் மாயம்
தமிழ்நாடு திருவள்ளுவர் காலை இலக்கிய மன்றம்
நடத்திய கவியரங்கில் இடபெற்ற மது செய்யும் மாயம் என்ற தலைப்பிலான
கவிதை..
மது செய்யும் மாயம்
தமிழ் வணக்கம் :
தமிழே..!!
நீ இல்லாமல் எப்படி நான்
தனித்திருப்பேன்
நீ இல்லாது போனால் நான்
தவித்திருப்பேன்
தேடியெனும்
உனைக்கற்று
களித்திருப்பேன்-அந்த
தேவாமிர்
தம்போலே
இனித்திருப்பேன் ...
உச்சப்புகழ் பெற்றுலகம்
மெச்சத்தகு அருந்தமிழே -நான்
கச்சத்தீவு
அருகிருந்து
கன்னித்தமிழ்
பருகி-மேலோர்
கற்பனையில்
கசிந்து வந்த
மிச்சத் தமிழ் பருகி
மீட்டுகிறேன்
கவியொன்று
கேட்டிடுவீர் செவிகொண்டு.
மது செய்யும் மாயம்:
மாதை தொடும்போது
மனதிலோர் மாயம்.
வாதை வரும்போது
உடலிலா மாயம்
போதை புகும்போது
என்னென்ன மாயம்
உன்னாலே
பலருக்கும்
மனதளவில் காயம்
இது
மது செய்யும் மாயம் .
மதியிழந்து
மதுவருந்தி
கதியிழந்து கதறுகையில்
விதிமீது
குறைசொல்லி
வேறென்ன லாபம்.
விடையேது
மில்லை இது
மது செய்யும் மாயம்
பதின்பருவ
கோளாறு
பாதை
மாற்றி போகும்
பாடாவதி
நட்பு கூட
பாழாக்க கூடும்
கூடாத பழக்கமென்று
உள்மனது சாடும்
அனாலும்
அதற்கும் ஓர்
சமாதானம் தேடும்
ஊர்க்கேட்க
மேடை போட்டு
மது ஒழிப்பு பேசும்
உடனமர்ந்து
பேசப்போனால்
மதுவாசம் வீசும்.
நல்ல தலைவர் எனநினைத்த
நம் நம்மனமோ கூசும்
இவராலே நாளை
நம்
நாடெல்லாம் நாசம்.
அடியாட்கள் கடை நடத்த
தடிமாட்டு
மக்களெல்லாம்
அடிமாடு போலடங்கி
குடிமாடு
ஆகின்ற
கொடுமையை என்ன சொல்ல.
ஆசையோடு காத்திருக்கும்
அன்பா மனைவி மக்கள்
தோசையோடு
காத்திருக்கும்
தூய்மையான தாய் உள்ளம்-நீ
தள்ளாடி
ன் நடக்கையிலே
கண்ணாடி போல் நொறுங்கி
பின்னாடி
வாழ்க்கையெல்லாம்
என்னாகும் தெரியாதா??
அன்பான
காதலரை
காலமது பிரித்து வைக்க
அரிவாள் வீச்சும்
ஆசிட் வீச்சும்
தருவார்
என்பது
எவ்வித நியாயம்
மொத்தத்தில்
இதெல்லாம்
மதுசெய்யும் மாயம்
இருசுருக்குக்காரி நல்ல
தலைபிரசவ
காரி அவ
வீடு வந்து சேராத
வீட்டுக்கார
குடிமகனை
காடு கரை தேடி திரிஞ்சு
கால் வழுக்கி கீழ் விழுந்து
தாயும்
பிள்ளையும் இறைவனடி
போய்சேர்ந்த
பின்னாடி
வாய்வயிற்றில்
அடித்தலறி
அழுதென்ன ஆகும்
-நீ
அறியாமல்
போனாய்
இது மது செய்யும் மாயம்
...
சற்றும்
கவனமிலா
சகசண்டி
அரசே
சாராயம்
ஒழிக்கப் புது
பேரையும்
அமையுங்கள்
பேராய முடிவாலே
சாராயம்
ஒழியுங்கள்....
என்றும்
அன்புடன்
உங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக