சொந்தமாய் ஒரு சொர்க்கம்

சொந்தமாய் ஒரு சொர்க்கம்

தமிழ் வணக்கம்:

அந்தரத்தின் அந்தரமே
சுந்தரத் தேன்தமிழே
வந்தெனக்கு நற்றமிழை
தந்திடடி நாவினிலே ...

தமிழே !!!!

வினைசெய்த பயனால் இங்கு
                       பிறந்திருக்கிறேன்
இணையில்லா உனைத் தாயாய்
                       அடைந்திருக்கிறேன்
துணைசெய்து உனைஉயர்த்த
                       துணிந்திருக்கிறேன் -இந்த
துர்பிறப்பு அதற்குத்தானே
                       பிறந்திருக்கிறேன் ..

சுகமென்ற ஆனந்தம்
   சொர்க்கத்தில் உள்ளதென்றால்
அகமகிழும் ஆனந்தம்
   அது என்ன வீணா??

தக தக வென கதிர்கொதித்து
     புவிவெப்பம் பொங்கும்போதும்
குளுகுளுவென வாழும்நிலை
     சொந்த சொர்க்கமே..

தனிவீடு தானின்றி
  தார்ச்சாலை வீடாக
தன்குடும்பத் தோடுவாழும்
   புன்மனது வறியவனின்
அரைவயிற்று அருங்குடும்பம்
  குறைவயிற்று கூழ்குடித்து
கொஞ்சம் சிரிப்பதுவும்
   சொந்த சொர்க்கமே



சல்லிக்கட்டு வேண்டி அன்று
    சுள்ளிக்கட்டின் வலிமைபோல
துள்ளிக் கட்டி கூடி உண்மை
    சொல்லிக்காட்டி வென்ற பொது
சொந்தமான சுவர்க்கம் ஒன்று
   வந்த இன்பம் வந்ததே ...

    போராட்ட பெண்களுக்கு
கடுங்காற்று குளிராலே
    கைகால்கள் விறைத்தேறி
கண்கள் நீர் வந்த போது
    இரவலாக வந்த அந்த
ஒற்றை போர்வை தந்த சுகம்
    சொந்தமான சொர்க்கம்
என்று தானறிந்தோமே ...



கையிருப்பில் எப்போதும்
சொர்க்கமுண்டு -இதை
காணாத மனிதர்தான்
கரைவதுண்டு..
அந்தமில்லா ஆனந்தம்
 சொர்க்கம் தருமென்றால்
சொந்தமான சுவர்க்கம் காண
  சோகத்திலும் மலர்ந்திருப்போம்.

ஹி ஹி ஹி ஹி ஹி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்