அனிதாவையும் மறப்போம்..ஆதித்யா கண்டு சிரிப்போம்

அட என்னடா இது. ஒண்ணுமேல ஒன்னு பிரச்சனை வந்துட்டே இருக்கு.மன அமைதி இல்லாத சலன நிலையிலேயே இருப்பதாக உணர்கிறேன். அப்படி என்னதான் பிரச்னை வருது.. ந ஒண்ணும் என் சொந்தக்கதை சோகக்கதை சொல்லலீங்க. தமிழனா பொறந்த ஒவ்வொருத்தரும் நெனச்சு நெனச்சு வெக்கப்படவேண்டியத சொல்றேன்.நல்ல தூக்கம் திடீர்னு ஒரு கெட்ட கணவால கலைஞ்சு போச்சுன்னு வெச்சுக்குங்க அப்புறம் நிம்மதியா

                                    buy it and read at optimal cost...

தூங்க முடியுமா.மனசு படபடனு ஒரு அதிர்ச்சியோடே இருக்கும் இல்லையா, அது போன்ற உணர்வை நிரந்தரமாகவே பெற்றிருக்கும் வரம் பெற்ற கூட்டம்தான் தமிழகமக்கள்(வாக்காளர்கள்). பின்ன என்னப்பா...சும்மா ஏதாவது பிரச்னை உண்டாக்கிட்டே இருந்தா என்ன மைசூருக்கு எங்களுக்காக ஆளுறோம்னு சொல்லிக்கிட்டு ஒரு அரசாங்கம். நடந்த பிரச்சனைகளை லிஸ்ட் போட்டு அப்படி இப்படி தாட் பூட் தஞ்சாவூர் னு பேசுறதுல வேலையே இல்லீங்க.என்னதான் முடிவு இதுக்கு. இதுவே கடைசி உயிராகட்டும் கடைசி உயிராகட்டும்னு சொல்லி சொல்லி பல பேர இழந்துட்டோம். இதற்குமேலும் அதே முட்டாள்தனத்தை செய்தால் உண்மையில் நாம்தான் ஏமாளிக் கோமாளிகள்.
   எந்த பிரச்சனையுமே தமிழ்நாட்ல முழுசா நின்னு பிடிச்சதில்ல. இதுவும் அப்பிடித்தான் நாலஞ்சு நாள்ல காணாம போய்டும். அதுதான் இப்போ பெரிய பயம்.சூட்டோடு சூடாக தங்கை அனிதாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.ஆற விட்டால் அவ்வளவுதான்.ஜல்லிக்கட்டு போராட்டத்து அடக்குமுறையை போல இதுவும் அரசியல்வாதிகளின் கேலிக்கூத்தால் மறக்கடிக்கப்படும்.
  பெரிதாய் ஒன்றும் யாரும் நம்மை மூளைச்சலவையிட்டு மடைமாற்ற தேவையில்லை. ஒட்டுமொத்த ஆத்திரக்கனலையும் அனைத்து முடிக்க ஒரு ஆதித்யா காமெடி போதுமானதாக இருக்கிறது.  
வரும் தேர்தல் வரை நினைவுபடுத்திக் கொண்டே இருங்கள்.
மறவாதே மனமே என எனக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். அதேபோல நீங்களும்.........(compel pannala)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்