#வடுக்களின்_வரலாறு . #கவிதை_வேள்வி ஆனாலும் நானென்ன அப்பாவி வாக்காளன். அதனாலே இப்போது அடங்குகிறேன் இந்த அவலத்தை நினைவூட்ட தொடங்குகிறேன். வலைப்பூ வாசிகளுக்கு வணக்கம். எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலாய் எந்த ஒரு கொலையோ,கற்பழிப்போ,எதுவோ நடந்தாலும் நம் சமூகம் அதை வெறும் அப்போதைய டீக்கடை பெஞ்சு தீனியாகத்தான் பார்கிறது. இன்னும்சொல்வதானால் நான் கேட்ட ஆகப்பெரிய அரசியல் தந்திரங்களும், தீர்வுகளும், நுணுக்கங்களும் நம் கிராமப்புரங்களின் டீக்கடை பெஞ்சுகளுக்கு தீர்மனங்கள்தான். இங்கே இப்போது பிரச்சனை தீர்வுகள் கிடைப்பதை பற்றி அல்ல. பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் முன் அது மறக்கடிக்கபப்டுவது தான். என் மனம் இதை வேறு தளத்தில் நின்று பார்க்கிறது. இங்கே காலச்சுழற்சியின் கட்டுக்குள் அகப்பட்டு கவனமிழக்கும் மக்களுக்கு கண்களின் முன் நின்று நினைவூட்ட ஒன்று தேவை.. இனி அதுப் என் கவிதைகளாக இருக்கும். ...