வடுக்களின் வரலாறு

#வடுக்களின்_வரலாறு. #கவிதை_வேள்வி

ஆனாலும் நானென்ன
அப்பாவி வாக்காளன்.
அதனாலே இப்போது
அடங்குகிறேன்
இந்த
அவலத்தை நினைவூட்ட
தொடங்குகிறேன்.

வலைப்பூ வாசிகளுக்கு வணக்கம்.

எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலாய் எந்த ஒரு கொலையோ,கற்பழிப்போ,எதுவோ நடந்தாலும் நம் சமூகம் அதை வெறும் அப்போதைய டீக்கடை பெஞ்சு தீனியாகத்தான் பார்கிறது.
இன்னும்சொல்வதானால் நான் கேட்ட ஆகப்பெரிய அரசியல் தந்திரங்களும், தீர்வுகளும், நுணுக்கங்களும் நம் கிராமப்புரங்களின் டீக்கடை பெஞ்சுகளுக்கு தீர்மனங்கள்தான்.

இங்கே இப்போது பிரச்சனை தீர்வுகள் கிடைப்பதை பற்றி அல்ல. பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் முன் அது மறக்கடிக்கபப்டுவது தான்.

என் மனம் இதை வேறு தளத்தில் நின்று பார்க்கிறது. இங்கே காலச்சுழற்சியின் கட்டுக்குள் அகப்பட்டு கவனமிழக்கும் மக்களுக்கு கண்களின் முன் நின்று நினைவூட்ட ஒன்று தேவை.. இனி அதுப் என் கவிதைகளாக இருக்கும்.

கவிதைக்கான வரம்பு கிடையாது..
( [ திட்ட நினைபவர்கள் திட்டலாம். தைரியமிருப்பவர்கள் கண்ணியமாக கெட்ட வார்த்தைகளிலும் கழுவி ஊத்தலாம்])
- இதற்கான பிரத்யேக அனுமதி கவிப்போமின் தலைமையிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

வாருங்கள் கவிப்போம்...
கவிதைகளை அவிழ்ப்போம்


#வடுக்களின்_வரலாறு #மறதி

மறந்திடத் தானே
மண்ணில் பிறந்தோம்
மத்திய மாநில அரசுகளே.
நீ
மாத மொருகொலை
செய்திடத் தானே
காத்திருக் கிரதெம் சிரசுகளே!
...............................

மறப்போம் என்பதை
அறிந்தாய் -அந்த
மமதையில் ஆயிரம்
புரிந்தாய்.
கொடுமைகள் பலவாய்
கொடூரம் பலவாய்
கொண்டாடிக் களித்துத்
குதித்தாய் - யாம்
திண்டாடும் நிலைகண்டு
சிரித்தாய்.

எல்லாமே மறப்பது
எங்கள்குணம் - எதையும்
சொல்லாமல் கிடப்பது
எங்கள் பயம்.

வெல்லாமல் பேசுகின்ற
வெறுந்தமிழ் தேசத்தார்
கொல்லாமல் விட்டதும்
பிழையானது - உனை
கொல்லாத தாலிந்த
நிலையானது.

உன்னை

என்னென்ன வோசொல்லி
புண்ணுள்ள இடம்பார்த்து
மண்ணள்ளி மேல்கொட்டி
மனதார தீமூட்டி
மனவேத னைதீர்க்க
மனங்கொள்கிறேன்......

ஆனாலும் நானென்ன
அப்பாவி வாக்காளன்.
அதனாலே இப்போது
அடங்குகிறேன்
இந்த
அவலத்தை நினைவூட்ட
தொடங்குகிறேன்.

-பாம்பன் மு.பிரசாந்த்
03.04.18 12.16 PM

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்