ஸ்டெர்லைட் பாடம்

செய்தி 24 வழி வந்த ஸ்டெர்லைட் ஆலை பற்றிய குறிப்புகளைக் கீழே தருகிறேன். இதிலிருந்து நாம் பெறவேண்டிய செய்திகளைத் தருகிறேன். யோசித்து முடிவு செய்யவும்.

1. பொதுவாக பொருளாதார அளவில் உலகை முதல் உலகு, மூன்றாம் உலகு எனப் பிரிப்பர். முதல் உலகின் மிகப்பெரிய சந்தை மூன்றாம் உலகு. இந்தச் சந்தையில் நுகர் பொருள் மட்டும் விற்பனை ஆவதில்லை. கழிவுகளும் அனுப்பப்படுகின்றன. பிரான்சின் அணு ஆலைக் கழிவுகள் எட்ட இருக்கும் பசிபிக் பாலினீசியத் தீவுகளுக்கு அனுப்பப் படுகின்றன. அமெரிக்காவின்  மின்கழிவுகள் (e-waste) சீனாவிற்கு அனுப்பப்படுகின்றன. 90 களில் ஜெர்மனியின் நெகிழிக் கழிவுகள் (plastic waste) சீனாவிற்கு அனுப்பப்பட்டு அங்கு பனிக்காலக் குளிருக்கு எரியூட்டப்பட்டன. நெகிழி எரியும் போது பல்வேறு நஞ்சுகள் காற்றில் கலக்கின்றன. இது பின்னால் பத்திரிக்கையில் வந்து அனுப்பிய கீல் நகர நகராட்சி பின்பு அடிவாங்கியது.

பாடம்: மூன்றாம் உலகு தூங்கும் உலகு. சூழல் பற்றிய பிரக்ஞை இல்லாத உலகு. நானும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். இதுவரை நடந்த எந்தத் தேர்தலிலும் எந்தக்கட்சியும் சூழலை முன்னிலைப் படுத்தவில்லை. ஏற்கனவே ஜனத்தொகை நிரம்பிய இந்தியாவில் சூழல் கேடும் சேர்ந்தால் நரகம் என்று வேறு எங்கும் போக வேண்டியதில்லை.

2. மூன்றாம் உலகின் மிக முக்கிய பிரச்சனை. தன்மானமற்ற, ஊழல் மிகுந்த அரசுகள் இறையாண்மை செய்வது. அதை விலை கொடுத்து வாங்கிவிடலாம்.

3. பொருளாதாரம் இல்லாத நாடுகளில் மதம் கோலோச்சும். இறைவன் பெயரால் மக்கள் முட்டாளாக்கப்படுவர். ஆப்பிரிக்க அனுபவம்: ஐரோப்பியர்கள் இங்கு வந்த போது எங்கள் கையில் நிலம் இருந்தது. அவர்கள் கையில் பைபிள் இருந்தது. பின்னால் எங்கள் கைக்கு பைபிள் வந்தது, அவர்கள் கைக்கு எங்கள் நிலம் பறிபோனது என்று! எனவே மூன்றாம் நாட்டு அரசியல் என்பது மதம், ஜாதியை (குடி) கொண்டு பிரித்தாளப்பட்டு மக்களை நிரந்தர அடிமைகளாக்கி வைத்திருப்பது.

4. தூத்துக்குடி பிரச்சனையை வைத்து ஒவ்வொரு கட்சியும் ஆதாயம் தேட முயல்கின்றன. இதில் எக்கட்சியும் யோக்கியமில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். இப்போது வக்காலத்து வாங்கும் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க எல்லாம் குற்றமுடையன. பா.ஜ.க வை மட்டும் பழித்துப் பயனில்லை. இப்பிரச்சனையும் வழக்கம் போல் ஆரிய திராவிட நோக்கில் பார்க்கப்படுகிறது. அது தவறு. ஊழல் கொண்ட அரசுகள் காசுக்காக என்னவும் செய்யும்.

முடிவு:

தகவல் புரட்சி நடந்த பின்னும் தமிழன் முட்டாளாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சூழல் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மக்களின் பலம் "ஓட்டு". அதையும் காசு வாங்கி ஓட்டுப் போட்டால் தற்கொலைக்குச் சமம். தன்மானத்தை இழந்துவிட்டு பின்னால் லபோ, திபோ என்று கத்துவதில் பயனில்லை.

மெய்ப்பொருள் காண்பதறிவு என்பது தமிழ் ஞானம். அறிவுசார் சமுதாயமாக தமிழகம் மாற என் ஆசிகள்!

News 24
நன்றி: Vijay.

*ஸ்டெர்லைட்_ஆலையும்_அதன்_பின்னனியும்*

1.உரிமையாளர் - அனில் அகர்வால்

2.தலைமையிடம் - இலண்டன்,இங்கிலாந்து

3.நிறுவனப் பெயர் - வேதாந்தா ரிசோர்ஸ்

4.அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி

5.முக்கிய உற்பத்தி - தாமிரம் (copper )

6.கழிவு உற்பத்தி - தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் 

7.முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத்

8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத்,மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா

9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா , ரத்னகிரி

10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்

11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு

12.அடிக்கள் நாட்டியவர் -  முதல்வர் ஜெ.ஜெயலலிதா 1994

13.ஆலை இயங்க அனுமதியளித்தவர் - முதல்வர் மு.கருனாநிதி 1996

14.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்

15.முதல் உண்ணாவிரத போராட்டம் -1996

16.போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை

17.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி

18.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7

19.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)

20.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)

21.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)

22.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)

23.ஐந்தாம் விபத்து - ஆயில் டேங்க் வெடிப்பு

24.ஆறாம் விபத்து - நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்

25.உற்பத்தி செய்தது - 2லட்சம் டன் (2005 கணக்கில்)

26.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28

27.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா

28.மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து -உச்சநீதிமன்றம்

29.தமிழ்நாடு பசுமை வாரிம்  - தடை

30.தேசிய பசுமை வாரியம் - அனுமதி

ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்