இடுகைகள்

பட்டாசுப் பிஞ்சு (Pattaasu pinju )

படம்
அன்னப் பருக்கைஅள்ளி உண்ணத் தொடங்குகையில் எண்ணத்தில் வந்த தந்தச் சிவகாசி சிறுவர் நிலை      கொள்ளிக் கொலைமருந்தை      அள்ளிக் கையாண்டு பள்ளிப் படிப்புவிட்டு தள்ளி நின்று வாழுகிற சுட்டிக் குழந்தைகளை கட்டிக் காப்பாற்ற – எவரோடும் முட்டிப் பயனில்லை எட்டி நோக்கினால்.....      வட்டிக் கடன் போட்ட குட்டியின் குட்டிகளை தட்டிக் கரைக்க எண்ணி கட்டித் தங்கங்களை சட்டிக் குதிரையாக்கிச் சாக்கடையில் தள்ளினரோ?? பள்ளித் தளமனைத்தும் கோயில் செய்யச் சொன்னதனை பகுத்தாய்ந்து பாராமல் பாரெங்கும் பணம் கொட்டி கோடானு கோடிகளாய் கோயில் செய்தது போதாதா? -இனி கோயிற் தளமனைத்தும் பள்ளி செய்வோம் – சிவகாசிப் பட்டாசுஆலைக்குள்ளும் துள்ளிச் செல்வோம் வாரீரோ ?? என்றும் அன்புடன் உங்கள்  முகவை மு பிரசாந்த்... இராமேஸ்வரம்

ரௌத்திரம் பழகு

படம்
  உணர்சிகள் அற்றுப்போன        உடம்பதுவே பிணமப்படி அல்லாத மற்றதெல்லாம்         பொல்லாத உயிர்விலங்காம்                                 - நெய்தலான்                 உணர்சிகள் அற்ற உடல் பிணமென்றும் , அவ்வாறல்லாத அனைத்தும் உயிருள்ள விலங்கு என்றும் சொல்கிற இந்த கவிஞரின் வரிகளுக்கு பின் பாரதியின் சாயlல்  காண முடிகிறது...உணர்ச்சிகளில் உயர் உணர்ச்சி எது என்றால் கோபம் என்கின்றனர் பெரியோர். ஆம்.. உண்மைதான். மனதில் சேர்ந்த அடித்துணை அழுக்கையும் ஒரே முறையில் வெளிக்கொணர்ந்து மனதை சுத்தப் படுத்திவிடுகிற ஒரு மகத்தான மனித மாண்பு. கோபப்பட்டு தீர்ந்த பின் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு தெய்வ நிலை அட்பாயவும் ஒருவனை தயார் படுத்தி விடுகிற கோபமே சிறந்தது என்பது ஏற்கத் தக்கதே.      அனால் இந்த கோபம் என்கிற உணர்வை பாரதி வேறு விதமாக அணுகுகிறான்.கோபம்,ஆத்திரம்,சினம் என பற்பல வார்த்த...

நண்பா உனக்காக

படம்
அன்று கடலில் சிங்களப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நண்பன் ப்ரிட்சோ வின் மறைவுக்காக.... இத்துப்போன பழங்கதையால் செத்துப்போன நண்பனை எண்ணி கத்திக்  கத்தி தொண்டத் தண்ணி வத்திப்போச்சு பாத்தீரா ? கண்டத்தில் பாஞ்ச குண்டு தொண்டைக்குழி துளைக்கையிலே துள்ளத் துடிக்க அவன் துடிச்ச  துடி புரியலையா ?? அரக்கன் மனங் கூட அரைநொடியாவது யோசிக்குமே அந்த நொடி சுடும்போது அறிவுகெட்ட உன் மூள எந்த ஒன்னுஞ் சொல்லலியா?- நீ மனுஷன் என்பது நினைவில்லயா? Pritjo- who died (07.03.2017) yesterday .. Who was killed By srilankan navy பாவிகள் தம் படைமடம் காட்ட பாலகன் இவன கொன்னீரோ ? சதியோ ? விதியோ ? யார்செய்த பிழையோ? மிச்சம்  மீனவன் கண்ணீரோ? பட்டதும்  போதும் கெட்டதும்  போதும்.... பார்த்துச் சகித்து  விட்டதும்  போதும்.. சில்லறைப் புத்திச் சிங்கள அரசே சின்னஞ் சிறுவரை சுட்டதும்  போதும் . சோறு போடும் சாமி என்று        கடலை  நினைக்கிறான் - சென்றால் மாறி மாறி பூச்சி போல        செத்து வீழ்கிறான் - பின்பு யாரு ப...

கலைஞருக்கு கலைஞனின் வாழ்த்து..

படம்
திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர்  திரு.மு. கருணாநிதி அவர்களின் 83வது பிறந்த நாளில் , தன் தலைவரின் பிறந்த நாளை தன் கவிதை வரிகளால் வாழ்த்தி வணங்கி அழகு பார்த்திருக்கிறான். எனது தாய்மாமன் என்ற உறவையும் தாண்டி என் குடும்பத்து கவிஞர்களில் முதன்மையானவர் என்கிற வகையில் அவர் என் தனிப்பட்ட வணக்கத்துக்குரியவர். 1997 ம் ஆண்டு கலைஞரின் பிறந்த நாள் விழாவுக்காக பாம்பன் சங்கர் ( சங்கர் குமார் க) எழுதிய கவிதை.... நீண்ட  காலத்துக்கு பிறகு இன்றுதான் கிடைத்தது... இதோ...... முத்தமிழ் அறிஞரே.. முத்துவேலர் மைந்தரே... தமிழ்தாயின் தலைமகனே.. தமிழினத்தின் தலைவனே.. உண்மைக்கு எதிரான சக்திகளை உடைதெறிந்த உத்தமனே... ஆதிக்க நெறியோர்க்கும் அதிகார வெறியோர்க்கும் அச்சுறுத்தல் நீரே... ஏழைகளின் இதய துடிப்பு அறிந்தவர் நீரே.. இதயத்து இன்னல்கள் களைந்தவர் நீரே.. சங்கத்தமிழ் சங்கமிக்கும் உன் நாவினிலே.. சத்தியம் தவறாமை காணுகையில் தமிழன்னையே.. தவமிருந்து பெற்ற தலைமகன் நீர் என்று தெளிவாயிற்று... கருணையும் நீதியும் பெயரிலே இணையப்பெற்றது உன் பிறப்பின் சிறப்பாயிற்று... அரியணை அமர்ந்து நீ ஆற்றிய பணி.. அ...

பள்ளி குழந்தை:vs தொழில் குழந்தை:

பள்ளி குழந்தை:   பாட மூட்டை தேவையில்லை பாஸ் பெயிலென கவலையில்லை   தேர்வுகள் ஏதுமில்லை - இவர்க்கு தேவையில்லாத குழப்பமில்லை   வேலைக்கேற்ப  வெகுமானம்   விரும்பும்போது விளையாட்டு   பிரம்பு கண்டு பயமுமில்லை   பிஸ்கட் பாக்சும்  தேவையில்லை தொழில் குழந்தை :   பத்திரமாய் பள்ளி சென்று   பலரோடு சிறிது பேசி   அன்னை கை சமையலிலே   அன்றாடம் சாப்பிடுகிற   அமோக  வாழ்க்கை   முதலாளி முகம் பார்க்க முன்னூறு முறை எண்ணி முன்னும் பின்னும் பயந்து நெளியும் முழு கஷ்டம் ஏதுமில்லை 1 ரூபாய் அதிகம் கேட்டு  ஓனரிடம் அடிவாங்கி அதன் பின்னர் பணம் வாங்கி  அந்த ஓரூ ரூபாய்க்கும் அப்படியே மருந்து வாங்கி  ஒத்தடம் கொடுக்கிற ஓயாத் துயரில்லை. சிரிப்பின் சாயலை  சிரிப்போரை பார்த்து மட்டும்    இப்படித்தான் சிரிப்பதேன   எண்ணிப்பார்த்து கொள்ளுகிற சிரிப்பாய் சிரிக்கும் பிழைப்பு இது.   பள்ளி குழந்தை: விடைத்தாள் வந்ததும்   வீட்டுக்கு பயந...

சாவு

.......கெட்ட  சாவு ..... விழுந்த  இடத்தில்     எழுந்து பார்த்தேன். சரிந்து கிடந்த தென் சரீரம். சாவது எவர்க்கும்   ஆவது உறுதி -அதை  அறியாதிருந்த தென் அறிவீனம். உடலின் பலம் மேல்  உள்ள நம் பிக்கையால்  உதறித் தள்ளினேன் உறவுகளை  இன்று ஊரே நிற்கிறது ஒருவரும் அழவில்லை உற்சாகம் தெரிகிறது-என்  உயிர் போன தாலோ ?  ஊரும் இல்லை உறவும் இல்லை  உனக்காக வருந்த ஒருவரும் இல்லை  வாழும் வரையில் அதிகாரம்  செய்தது எல்லாம் வீணாகும். உன்னை எண்ணி ஒருவன் வருந்த  உலகில் உன் சாவு உயர்ந்த தாகும். அன்றேல்  நுந்தம் பிறப்பென்பதே  நுங்கின் இடைப்பட்ட கசடாகும். நல்ல வாழ்க்கை வாழ எண்ணி  நாளும் எங்கும் மனிதனே  நல்ல சாவு கிடைக்க கொஞ்சம்  நல்ல உள்ளம் கொள்ளுவோம்    என்றும் அன்புடன் \       உங்கள்  முகவை மு பிரசாந்த் 

சொல்லாத காதல்

 ...சொல்லாத காதல் ... சொல்லாத காதல் இல்லாம போச்சு     துள்ளாத மனமிப்போ தூள் தூளா ஆச்சு - நீ       இல்லாத வாழ்க்கை இனிவேணா எனக்கு       இத்தோட முடிஞ்சது-நம்ம ரெண்டு பேரு கணக்கு இல்லாம இல்ல உன்மேல்        எல்லையில் லாத அன்பு -நா சொல்லாம போனதுதான்         செஞ்சு வெச்ச ஒரே தப்பு   கண்மூடித் தனமா காதலிச்சேன்-உன்         கல்யாண சேத்தி கேட்டு பேதலிச்சேன் கரையில மீனாக தத்தளிச்சேன்-மனம்         கண்ணாடி போல் நொறுங்க நா தவிச்சேன் வாழ்ந்தா தான் காதலுன்னு     வழக்கேதும் இல்லையடி-நா வாய்திறக்காத குற்றத்துக்கு -இது     வாழ்நாள் தண்டனை டி ... ஆனது ஆகட்டும்     போனது போகட்டும்    நல்ல வாழ்க்கை ஒன்றாக       நடப்பதெல்லாம் நன்றாக உனக்கொரு வாழ்க்கை உண்டாக       நானுன்டென்றும் உனக்காக.......           என்றும் அன்புடன்           ...