புதியன விரும்பு

புதியன விரும்பு “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது நன்னூல் விதி . இந்த விதியின் பயனாக அனைவரும் எண்ணுவது பழையவைகள் அழிக்கப்பட்டு புதியவைகள் வரவேண்டும் என்பதாம். என்னடா இது? ஏதோ பழைய புராணம் பாடத் தொடங்குகிறானே என்று என்ன வேண்டாம். பழமையும் புராணமும் அவ்வளவு சலிப்பு தருபவை அல்ல. நம் எட்டயபுரத்து புரட்சியாளன் பாரதி சொன்ன அறிவுரைகளாம் புதிய ஆத்திசூடியின் அறிவுரைகளின் மொத்த கரு என்னவென்றால் மனிதன் பழைய நிலைமாற்றி புதியதோர் மனிதனாக மாறி சமுதாய அக்கறையுடன் கூடிய வல்லவனாக திகழ வேண்டும் என்பதாகவே இருக்கிறது].. புதியன விரும்பு என்பதை வெறும் வாய் வார்த்தையாக சொல்லிவிட்டு போனவனல்ல பாரதி. அதுபோல வாழ்ந்து கட்டியவன் . பலரின் கேலிக்கு மத்தியிலே புதுகவிதை என்கிற பெருவரத்தை தற்கால இலக்கிய உலகிற்கு அருளி செய்தான். யாப்பரியா புலவனென்று பிறர் சொன்ன போதும்கூட, இலக்கண விதிகளுக்கு உட்பட்டு கருத்தை சிதைப்பது என்...