வைரமுத்து வைரமுத்து தான்

.வாடிவாசல் திறந்துவிடும்வாழ்த்துகிறேன் தம்பி - இனிகோடிவாசல் திறக்கும்உன்கொள்கைகளை நம்பிதலைவர்களே இல்லாதகட்சியொன்று காட்டி - ஒருதலைமுறைக்கே வழிசொன்னீர்தமிழினத்தைக் கூட்டிஅடையாளம் தொன்மங்கள்அழிக்குமொரு கூட்டம் - உங்கள்படையாழம் பார்த்தவுடன்பயந்தெடுத்த தோட்டம்பீசாவும் பெப்சியுமேஇளைஞர்கள் என்று - வாய்கூசாமல் சொன்னவரைக்கொன்றுவிட்டீர் கொன்றுசொல்வாங்கி எல்லாரும்சூளுரைத்த பாட்டு - கடல்உள்வாங்கிப் போனதடாஉங்கள்குரல் கேட்டுஒருகொம்பு ஆணென்றால்மறுகொம்பு பெண்தான் - அந்தஇருகொம்பின் மத்தியிலேஇடுங்கியது மண்தான்தண்பனியால் சுடுகதிரால்தமிழினமா சாகும்? - அடதண்ணீரில் வீழ்வதனால்வெயில்நனைந்தா போகும்?தெருவிருந்து போராடத்திறம்தந்தார் தமக்கும் - உம்மைக்கருவிருந்து பெற்றாரின்கால்களுக்கும் வணக்கம்சதுராடிக் களம்கண்டசகோதரிகாள் வணக்கம் - உங்கள்எதிர்காலக் கருப்பைகள்நெருப்பைத்தான் சுமக்கும்காளைகளை மீட்டெடுக்கக்களம்கண்ட கூட்டம் - இனிநாளைகளை மீட்டெடுக்கநாணில்அம்பு பூட்டும்வரம்புகளை யார்விதித்தார்வரட்டுமொரு யுத்தம் - எங்கள்நரம்புகளில் ஓடுதடாராஜ ராஜ ரத்தம்போராடிச் சாதித்துப்புகழ்கொண்டீர் யாண்டும் - இனிச்சாராயம் குறித்தும்நீர்ஆராய வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்