வணக்கம். பிறப்பது எதற்கு ? இறப்பதற்கு. எனில் இறப்பது எதற்கு ??..... எங்கள் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் கிண்டலாய் கேட்டுவிட்டு விளையாட ஓடிபோய்விட்ட ஒரு குழந்தையின் கேள்வி இது. அதுவரையில் தாத்தா முகத்தில் இருந்த அனுபவ கம்பீரம் அப்போது காணாமல் போயிருந்தது. அடுத்தவீட்டு சங்கதியை ஓட்டுக்கேட்டு அது குறித்து சிந்திப்பதும் கூட அலாதியான சுகம்தான். ..சரி... இந்த கேள்வி... என்னதான் இது. எதற்கு இறக்க வேண்டும். உடல் ஒத்துவராத நிலை எய்தி உயிர் பிரிந்தபோது இறப்பு நேர்கிறது என்கிறோம். அப்படியென்றால் உடல் நன்றாக இருக்கும்போதே இறந்துவிட்டால் இந்த சங்கடம் இல்லைதானே?. ஆனால் அது வாழவேண்டிய வயது என்கிறோம். எனில் வாழ வேண்டிய காலம் என்றுஒன்று இருக்கிறது என்றால் அந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும். செய்வது இது என பட்டியலிட முடியுமா?. முடியுமென்றால், இதை செய்து கொண்டே இருப்பதுதான் உலகமா?. இதுதான் உண்மையா? இல்லை உண்மையாகவே வாழ்க்கை என்பது வேறா?. என சிக்கலுக்குள் சிக்கல் வந்து சிக்கி கொள்கிறது...