காதலாகி.....கண்ணீர் மல்கி....
மந்திரச் சிரிப்பில்
மாயங்கள் செய்திடும்
சுந்தரப் பெண்சிலையே. நீ
பம்பரம் போலென்னை
சுற்றிட வைத்திடும்
மந்திரம் எங்குகற்றாய்
எனக்கென எதுவும்
இல்லையென்று இருந்தேன்
அதுவரை பலகாலம்
அனைத்தும் நீ என
அலைந்தேன் அன்பே
அதுவும் ஒருகாலம்...
உனக்காய் பலரை
பகைத்தேன் அதுவும்
ஏனென்று தெரியாது- உன்னை
எனக்கா படைத்தான்
இறைவன் என்றால்
பதிலே கிடையாது??
எவருக்கும் பிடிக்காத
உன்கால் கொலுசொலி
என்செவிக்கு சங்கீதமே- நாம்
பலகோடி ஜென்மங்கள்
இதுபோல வாழ்ந்தாலும்
ஓயாது நம்கீதமே....
காதலர் யாரென்று
காலமும் கேட்டால்
நம்பெயர் சொல்லிடட்டும் -அதில்
பாதகம் ஏதடி
பைங்கிளியே மனம்
காதலில் துள்ளிடட்டும்...
கைகூடா காதலோடு
கண்கள் நீரை வார்க்க
காலம் முடிவு செய்யட்டும் நமை
அடுத்த ஜென்மத்தில் சேர்க்க..
நன்றி..
காதல் கவிதைகள் எழுதி பார்க்கலாமே என்ற ஆசையில் எழுதினேனே அன்றி வேறெந்த நோக்கமா பின்புலமோ இல்லை.அதுல பாருங்க காதல் சோகம் மட்டும்தான் நமக்கு வருது... கடவுளே அடுத்த தடவை யாவது நல்ல காதல் டூயட் ஒன்னு எழுத ஆசிர்வாதம் குடுப்பா..
இப்போ இந்த கவிதைக்கு நல்ல கமெண்ட்ஸ் வாங்கி குடுப்பா..
என்றும் அன்புடன்
பாம்பன் மு.பிரசாந்த்
கருத்துகள்
கருத்துரையிடுக