லவ் பண்றது தப்பா??

லவ் பண்றது தப்பா..

  எல்லாரும் கேட்ட கேள்விதான். ஆனா பதில் மட்டும் வேற வேற.  இடத்தை பொறுத்தும் ஆட்களை பொறுத்தும் பதிலின் தண்மையும் மாறிக்கொண்டே இருக்கும். எனக்கு தெரிந்தவரை இந்த மாதிரியான சிறப்பு வேறெந்தஒரு கேள்விக்கும் வாய்த்ததில்லை.

  கேள்வி ஒண்ணுதான். ஆனால் கேட்பது நம்ம வீட்டு புள்ளையாஇருந்தா ஒரு பதில். பக்கத்துவீட்டுபுள்ளையா இருந்தா ஒரு பதில். எவ்ளோ செல்பிஷ் இல்ல நாம. ஆனாலுங்கூட நம் மேல் ஒன்றும் இதில் தவறில்லை. கடந்து வந்த கால மாற்றத்தில் எல்லாவற்றையும் டேக் இட் ஈஸி என்று சொல்ல முடிந்த நம்மால் நம் வீட்டுக்குள் வரமுயற்சிக்கும் காதலை மட்டும் அப்படி ஒத்துக்கொள்ளமுடிவதில்லை. காரணம் எவராலும் தகர்க்க முடியாத தமிழகத்தின் சாதிமுறை சமுதாயம்.
     

      என்னடா இது ஜாலியா ஆரம்பிச்சு சாதிய கொண்டு வந்து கோர்க்குற னு கேக்குறீங்களா. ஆரம்பத்திலே எனக்கும் அப்படித்தான் இருந்தது.காதலிப்பது தவறா? என்கிற அப்பாவிகளின் கேள்விக்கு அப்பாக்களின் பதில்  என்ன என்று அறிய முற்பட்டு ஒரு குட்டி  களஆய்வை மேற்கொண்டது எங்கள் குழு. விளைவு.... பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை தவிர மற்ற பிள்ளைகளின் காதலுக்கு பச்சை கொடிதான் காட்டுகிறார்கள். எனில் அவர்களுக்கு பிள்ளைகள்  காதலிப்பதில் பெரிதாக எதிர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படியென்றால் தத்தம் பிள்ளைகளை எதிர்ப்பதன் காரணம் என்ன?  என்பதை அறியும்நோக்கத்தில் திசை திருப்பப்பட்டது நம் ஆய்வு. அந்த ஆய்வின் முடிவுதான் மேலே சொன்ன சாதிய சமுதாயம்.  சொல்லபோனா ஆரம்பத்தில் நினைத்திருந்த இந்த கட்டுரையின் நோக்கமே கிட்டத்தட்ட மாறிபோச்சுங்க. இப்போ தெரியுதா ஏன் சாதியை கோர்க்கிறோம்னு..

மனுஷனா பொறந்த எல்லோருக்கும் காதல் மேல ஓரு காதல் இருந்துகொண்டே இருக்கிறது.இன்னும் சொல்ல போனால் இன்றைய தலைமுறையை விட நம்மை கடந்த தலைமுறை வண்டி வண்டியாக காதல் அனுபவங்களை கொட்டிதீர்க்கிறார்கள்.ஆனால் அவர்களின் பிள்ளைகள் காதலிப்பதை ஏற்றுகொள்ள மனம் வரவில்லை. இது உண்மையில் புதிராக இருந்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யமான சவாலாகவே இருந்தது. 80 களில் 6 காதல் செய்த அந்த பெரியவரும் கூட தன் மகனின் காதலை ஏற்கவில்லையாம். தன் மகனின் மனநிலையை , அவன் பட்ட பாட்டை அவ்வளவு உருக்கமாக சொல்லமுடிந்த அவரால் அவன் மனநிலைக்கு ஆதரவாக பதிலை மட்டும் சொல்ல அன்று முடியவில்லை.  "அந்த பொண்ணு மட்டும் எங்க ஆளுகளா இருந்தா ஜாம் ஜாம் னு கல்யாணம் பண்ணிவெச்சுருப்போம்" .என்ன பண்ண எங்க அண்ணன் தம்பிங்க ஒத்துக்கமாட்டங்கள்ல. என்கிறார் அவர்.

    இதுபோலத்தான் எல்லா வீடுகளிலும் எல்லா பெற்றோர்களும் ஊர்காதலை விரும்புபவர்களாகவும் உள்வீட்டு காதலை வெறுப்பவர்களாகவும் வேடம் பூண்டு வாழ்கிறார்கள்.

  எல்லா பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளின் காதலை சேர்த்து வைக்க ஆசைதான்.உண்மையில் தங்கள் பிள்ளைகள் தங்களுக்கு இணையை தேடிக்கொள்கிற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என்று மகிழ்ச்சியடையத்தான் செய்யும் பெற்றோர் மனம். இன்னும் ஒருபடி சொல்வதானால் இப்போதே கெட்டிமேளம் கொட்டவும்உள்மனம் ஒப்புக்கொள்ளும். ஆனால்....... இன்னும் தமிழகத்தை ஆட்டிக்கொண்டிருக்கிற சாதிஉணர்வு அப்போது குறுக்கே விளையாட தொடங்கியிருக்கும். சுற்றமும் சமுதாயமும் என்ன நினைக்கும் என்பதால் வறட்டு வீம்புடன் வாக்குவாதம் நடத்தி வேண்டா வெறுப்பானமுகம் காட்டும்..

  தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் வளர்க்கப்பட்டகாலம் அப்படியானது. ஆனால் அதை அவர்களோடு வைத்துக்கொள்ளாமல் எதிர்வரும் தலைமுறைக்கும் திணித்து விடுகிறார்கள். அப்போ

     லவ் பண்றது தப்பா னு இனி யாராவது உங்ககிட்ட கேட்டா இப்பிடி பதில் சொல்லலாமா.....லவ் பண்ணு ஆனா உங்க ஆளுகளா பாத்து பண்ணு....ச்சீ...எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா..ஆனால் பிள்ளைகளிடம் "லவ் பண்ணினாலும் நம்ம சாதியில பாத்து பண்ணு" என சொல்லி அனுப்புகிற பெற்றோர்கள் தமிழகத்தில் அதிகம் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கும் சாதியை கடத்துவதில் அதிக முனைப்போடு செயல்படும்
இது போன்றோர் இருக்கும் வரை காதலிக்க ஆசைப்பட்டால் இதுதாண்டா பதில்....

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

மது செய்யும் மாயம்