எங்கடா காதல்
காதலென்ன கண்ணாமூச்சி ஆட்டமா?
காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் நரகமா.. ஆஆஆ..
காதலுக்கு பள்ளிக்கூடம் கட்ட போறேன் நானடி
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே
காதல் தந்த வலிதீரும் காதலினாலே
காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவாஆஆஆ..
இந்த பாடல்களெல்லாம் உங்களுக்கு தெரியாமல் இல்லை.ஆனால் இந்த நேரத்தில் உங்களுக்கு இதை நினைவூட்ட வேண்டியது கடமைஆகிறது.ஊடகத்துறையின் உச்சவேக போராளி, எதையும் மக்களிடத்தே எளிதில் கொண்டுசேர்க்கும் வல்லமை படைத்த சினிமா. சில நல்ல கதாநாயகர்களை திரையில் காணும்போது இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று மனம் ஒரு சமாதானம் சொல்லிக்கொள்வதை போல இப்போது காதலும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அதாவது உண்மையான காதலெல்லாம் சினிமாவில் தான். நிஜத்தில் வாய்ப்பே இல்லை என்கிற மனநிலைக்கு நம் சமூகம் வந்துவிட்டது. எங்கோ தலைதூக்கும் நல்லவர்களை போல, ஆங்காங்கே தலைதூக்கும் உண்மையான காதல் செத்துப்போகிறது இந்த சமுதாயம் போடுகிற அவசர கால கூச்சலில் சத்தமில்லாமல் செத்துப்போகிறது.இதுதான் காதலோ என்பதை இனிவரும் தலைமுறை யாரைப்பார்த்தும் கற்றுக்கொள்ள முடியாது.ஒருவேளை கற்றுக்கொண்டால் அதைவிட பெரும் சமுதாய சிக்கல் வேறேதும் கிடையாது.அப்படியானால் எங்குதொலைந்தது காதல்.அவசரமாக இணை தேடிக்கொள்வது தான் காதலின் நோக்கமா?.அது விருத்தி காலத்து விலங்குகளின் செயலில்லையா. Single மற்றும் committed என்கிற இரண்டே வகைமைக்குள் மாட்டிதவிக்கிற மர்ம கூட்ட மனித வாழ்வில்...எங்கடா காதல் என்பதொன்றே முதல் கேள்வி
கருத்துகள்
கருத்துரையிடுக