காத்திருப்பது சுகம் என்பது முன்னோர் சொல்லி வைத்தது.அந்த சுகானுபவம் இன்று நிறைய கிடைத்தது. ஆனால் வெறுமனே காத்திருப்பது என்பதை போன்ற வெறுப்பான சுகம் வேறெதுமில்லை .இது என் அனுபவம் இன்றெனக்கு அளித்த அறிவு. வேலைகள் நிறைய நிலுவையில் மட்டுமே கிடக்க, அவற்றை பிறகுதானே செய்ய முடியும் என்கிற சமாதானத்தை தந்து என் சோம்பேறித்தனத்துக்கு இந்த காத்திருப்பும் கை கொடுக்கிறது.. ஒருவகையில் இதுகூட நல்லதுதான் போலும். வேலை இருக்கிறது வேலை இருக்கிறது என்று யாரோ சொன்ன வேலைக்காக என்னை நானே அர்ப்பணித்து கொள்வதை விடவும், வேலை இல்லை என்றால் படிக்கிறேன் பேர்வழி என்று யாரோ ஒருவர் சொன்னதை தெரிந்துகொள்ள முயற்சிப்பதை விடவும் இந்த வெறுமனே காத்திருக்கும் வேளையில் என் சிந்தை என் பார்வையில் உலகத்தை யோசிக்க தொடங்குகிறது என்பதும் லாபமாக தான் இருக்கிறது. பார்த்தீரா..என் சோம்பேறித்தனத்துக்கு இரைபோட்டு இசைந்துகொடுக்கும் இந்த காத்திருப்புக்கு வக்காலத்து வாங்க தொடங்கிவிட்டது என் மனம்..கே டி மனதாயிற்றே... ...